ஆகஸ்ட் 15ஆம் தேதி விற்பனைக்கு உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் ஐந்து கதவுகளை கொண்ட தார் ராக்ஸ் எஸ்யூவி மாடலின் முகப்பு பக்கம் தொடர்பான படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
THE SUV என்ற பெயரில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த டீசரை முழுமையாக வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்ட ஆறு ஸ்லாட் கொண்ட கிரிலை முதன்முறையாக இந்த மாடலானது பெறுகின்றது.
அதே நேரத்தில் வட்ட வடிவத்திலான எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட்டில் C வடிவ எல்இடி ரன்னிங் ரிங் விளக்கு ஆனது கொடுக்கப்பட்டு மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருக்கின்றது. முன்புற பம்பர் வழக்கம் போல மிக நேர்த்தியான உயரத்தை வழங்கும் வகையிலும் அதே நேரத்தில் கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனையும் பெறவுள்ள ரியர் வீல் டிரைவ் மாடல்களுக்கு 1.5 லிட்டர் டீசல் என்ஜின், ஆல் வீல் டிரைவ் வேரியண்டுகளுக்கு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை பெறுவதுடன் மூன்று என்ஜினிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற உள்ளது.
The post மஹிந்திராவின் தார் ராக்ஸ் எஸ்யூவி அறிமுகம் appeared first on Automobile Tamilan.