இந்தியாவின் மல்யுத்த ராசி!
மல்யுத்தத்தில் இந்தியா 2008 முதல் தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கம் வெல்கிறது. அமன் ஷெராவத் வென்றது எட்டாவது பதக்கம்.
இந்தியாவுக்கு ஆறாவது பதக்கம்!
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 57 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோ ரிகோ நாட்டு வீரர் டேரியன் க்ரூஸைத் தோற்கடித்து வெண்கலம் வென்றார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அமன் ஷெராவத், தன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர்.
கிடைக்குமா மற்றுமொரு வெண்கலம்! – களமிறங்கும் அமன்!
மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் களமிறங்குகிறார்.