ரூபாய் 4.57 கோடி விலையில் இந்தியாவில் லம்போர்கினி வெளியிட்டுள்ள புதிய உரூஸ் SE சூப்பர் காரில் 4.0 லிட்டர் V8 பிளக் இன் ஹைபிரிட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான ஸ்ட்ராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா முறைகள் (சாலை மற்றும் ஆஃப் ரோடு பயன்பாட்டிற்காக), மற்றும் நிவி, சாப்பியா மற்றும் டெர்ரா போன்ற ரைடிங் மோடுகளுடன் நான்கு கூடுதல் மோடுகளாக EV டிரைவ், ஹைப்ரிட், ரீசார்ஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸ் என மொத்தமாக 10 மோடுகளை பெற்றுள்ளது.
4.0-லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு V8 இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 620hp மற்றும் 800Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. கூடுதலாக இந்த காரில் உள்ள 25.9kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கைப் பயன்படுத்தும் பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் சேர்க்கப்பட்டு. மொத்த பவர் 800hp மற்றும் 950Nm ஆகும். இந்த மாடலில் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
உரூஸ் SE மாடல் 60km ரேஞ்ச் பேட்டரியில் மட்டும் இயக்கமுடியும் கூடுதலாக மணிக்கு 130kph வேகத்தை எட்டுகின்றது. இந்த மாடல் 0-100kph வேகத்தை எட்ட 3.4 வினாடிகள் எடுத்துக்கொள்ளும் நிலையில் அதிகபட்ச வேகம் 312kph ஆகும்.
The post இந்தியாவில் ரூ.4.57 கோடியில் லம்போர்கினி உரூஸ் SE விற்பனைக்கு வெளியானது appeared first on Automobile Tamilan.