பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனம், மக்களுக்கு பல்வேறு வகையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, வெவ்வேறு கால அளவுகளுக்கு மாறுபட்ட விலையில் கிடைக்கும் பொதுத்துறை நிறுவனம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தரும் பிஎஸ்என்எல், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது. அதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.91 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்தத் திட்டத்தைப் பற்றிய விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்.
மலிவான ரீசார்ஜ் திட்டங்களுக்காக அறியப்படும் பிஎஸ்என்எல், அண்மையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தியதற்குப் பிறகும், தனது சேவைகளில் எந்தவிதமான விலை மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. தற்போது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியாவின் விலைகளை விட பிஎஸ்என்எல் சேவைகளுக்கான கட்டணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது.
பிஎஸ்என்எல் போர்ட்ஃபோலியோ
வெவ்வேறு விலைப் பிரிவுகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருக்கும் பிஎஸ்என்எல், பயனர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது. அவற்றில் ரூ.91 ப்ரீபெய்ட் திட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
91 ரூபாய்க்கு 60 நாட்கள் வேலிடிட்டி
பயனர்களின் வசதிக்காக, பிஎஸ்என்எல் நிறுவனம் குறுகிய காலத்திலிருந்து நீண்ட கால வரையிலான பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. 100 ரூபாய்க்கும் குறைவான பல திட்டங்களில் ரூ.91 திட்டத்தில் பயனர்கள் 60 நாட்கள் அதாவது 2 மாதங்கள் வேலிடிடியைப் பெறுவார்கள். குறைந்த செலவில் உங்கள் சிம்மை அதிக நாட்கள் செயலில் வைத்திருக்க விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் நீங்கள் அழைப்பு மற்றும் டேட்டாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். போன் செய்ய விரும்பினால், ஒரு நிமிடத்திற்கு 15 பைசா மற்றும் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு 25 பைசா செலுத்த வேண்டும். இது தவிர, இணையத்திற்கு ஒரு எம்பிக்கு 1 பைசா வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.