தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 1700 ரூபாய் சம்பளத்தை அவ்வாறே வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை தலைவர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த் பாராளுமன்றத்தில் (08) தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் செலுத்தப்படாமை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 27 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபை தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான பிரச்சினை தற்போது சம்பள நிர்வாக சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக சம்பள நிருவாக சபையினால் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டாலும், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை அவ்வாறே வழங்குவதற்கு தொழில் அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் சபை தலைவர் சுசில் பிரேம் ஜெயந்த் சுட்டிக்காட்டினார்..