சென்னை: நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அந்தகன் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. தொடர்ந்து அந்தகன் படம் பாராட்டுக்களுடன் வசூலையும் குவித்து வருகிறது. இந்தப்படத்தின்மூலம் தன்னுடைய ரீ -என்ட்ரியை பிரஷாந்த் சிறப்பாக செய்துள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
