சென்னை சூளை அஷ்டபுஜம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி ஜெயலட்சுமி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார்த்திக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். கணவன், குழந்தைகளைப் பிரிந்த ஜெயலட்சுமி, அம்மா வீட்டில் தங்கியிருந்து அழகு நிலையத்தில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அந்த அழகு நிலையத்துக்கு வாடிக்கையாளராக வந்த பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரூபன் (33) என்பவருடன் ஜெயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இருவரும் கணவன் மனைவிபோல ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர் என்றும், அப்போது ஜெயலட்சுமியின் நடவடிக்கையில் ரூபனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது,

மேலும் ரூபன் மதுபோதைக்கு அடிமையானதால் அவரை ஜெயலட்சுமி, மதுரவாயல் பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார். அங்கு ரூபன் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். பின்னர் ஜெயலட்சுமியிடம் போனில் பேசிய ரூபன், இனிமேல் உன்னுடன் சந்தோஷமாக வாழ்வேன் என்று கூறியிருக்கிறார். இந்தநிலையில் ஜெயலட்சுமி, வேலைக்காக வெளியில் செல்வதாகக் கூறிவிட்டு கடந்த 8-ம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் ஜெயலட்சுமியின் தங்கைக்கு கடந்த 9-ம் தேதி போன் செய்த ரூபன், “உன்னுடைய அக்காவும் நானும் திருவல்லிக்கேணி லாட்ஜல் அறை எடுத்து தங்கியிருந்தோம். அப்போது எங்களுக்குள் சண்டை ஏற்பட்டு ஜெயலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
அதைக்கேட்ட பிரியங்கா, `விளையாடாதீங்க’ என்று கூறியுள்ளார். அதற்கு ரூபன், `நான் சொல்வதை நம்பவில்லை என்றால் விடுதியில் போய் பாரு’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்காவும் அவரின் குடும்பத்தினரும் ரூபன் கூறிய விடுதிக்கு சென்று விவரத்தைக் கூறினர். அதன்பிறகு ரூபனும் ஜெயலட்சுமியும் தங்கியிருந்த அறை எண் 206-க்கு விடுதி ஊழியர்கள் சென்று கதவை திறந்தனர். அப்போது ஜெயலட்சுமி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து பிரியங்கா திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதில் ஜெயலட்சுமியை கொலை செய்தது ரூபன் என்றும் தன்னுடைய அக்கா, ஸ்பாவில் வேலைப்பார்த்தால் ஆண் வாடிக்கையாளருடன் போனில் பேசுவதுண்டு. அதை தவறுதலாக புரிந்துக் கொண்ட ரூபன், ஜெயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் ஜெயலட்சுமியை கொலை செய்து விடுவதாகவும் சில தினங்களுக்கு முன்பு கூறிவிட்டுச் சென்றார் என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், கொலை வழக்குப்பதிவு செய்து ரூபனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஜெயலட்சுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்ததால் அவரை 9-ம் தேதி காலையில் கொலை செய்துவிட்டு அறையை பூட்டிவிட்டு தப்பியதாகக் கூறினார். அதன் அடிப்படையில் ரூபனை (33) கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88