Arshad Nadeem: தங்கம் வென்ற பாக். வீரர் அர்ஷத் நதீமுக்கு மாமனார் அளித்த பரிசு – சுவாரஸ்ய பின்னணி!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு அவருடைய மாமனார் பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி, இந்தியாவின் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி தங்கம் வென்றார். 2015-ம் ஆண்டு முதல் ஈட்டி எறிதலில் பங்கேற்று வருகிறார் அர்ஷத் நதீம். கானேவால் என்கிற கிராமம்தான் அவரின் சொந்த ஊர். எறிவதற்கு ஈட்டியே இல்லாத, ஆடுவதற்கு மைதானமே இல்லாத ஒரு சூழலிலிருந்துதான் அவர் வந்திருக்கிறார்.

Neeraj & Nadeem

அர்ஷத்தின் தந்தை ஒரு கட்டடத் தொழிலாளி. பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட அர்ஷத்துக்கு ஊர் மக்கள்தான் கூட்டாகப் பணம் சேர்த்து வழங்கி அவரை வெளியூர் போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைத்திருக்கிறார்கள். தங்கம் வென்று தனது ஊருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தான் அரசு 10 கோடியைப் பரிசாக வழங்கியுள்ளது.

பல்வேறு நிறுவனங்களும் அவருக்குப் பல பரிசுகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் எருமை மாடு ஒன்றைப் பரிசாக அளித்து இருக்கிறார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எருமை மாடு பரிசாக வழங்கியதற்கான காரணம் குறித்துப் பேசிய அவர், “எருமை மாடைப் பரிசளிப்பது என்பது ஒருவருக்கு அதிக செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்கான அடையாளம்.

Arshad Nadeem

எங்கள் கிராமத்தில் இதுதான் நடைமுறை. அதனால்தான், எனது மருமகனுக்கு எருமை மாட்டைப் பரிசளித்தேன்” என்று கூறியிருக்கிறார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.