இவர்கள் இனி அணிக்கு தேவையில்லை! இலங்கை தொடருக்கு பின் அதிரடி முடிவு!

சமீபத்தில் இந்திய அணி இலங்கைக்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் சூரியகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து ஒரு நாள் தொடருக்கான அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றனர். ஆனாலும் இலங்கை அணியிடம் ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் 27 வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் தொடரை இந்தியாவிற்கே எதிராக வெற்றி பெற்றுள்ளது இலங்கை அணி. இந்திய அணியின் இந்த தோல்வி பல கேள்விகளை எழுப்பி உள்ளது, குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திணறுவது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. 

230, 240 போன்ற டார்கெட்டை கூட அடிக்க முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் பெரிதாக ஒரு நாள் போட்டிகளில் விளையாட வில்லை. காரணம் டி20 உலக கோப்பை இருந்ததால் அதற்கான பயிற்சிகளை அதிகம் மேற்கொண்டனர். ஒரு நாள் போட்டிகளை விட அதிகமாக டி20 போட்டிகளில் விளையாடியது கூட இந்த தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சிக்காக நியமிக்கப்பட்டுள்ள கம்பீர் தலைமையில் விளையாடிய முதல் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்பஜன் சிங் காட்டம்

தற்போதுள்ள தேர்வு குழுவும், இதற்கு முன்னாள் இருந்த தேர்வு குழுவும் இதே தப்பை தான் திரும்ப திருப்ப செய்கின்றனர். வீரர்களின் தற்போதைய பார்மை தான் பார்க்க வேண்டுமே தவிர, அவர்களின் பெயரை பார்க்க கூடாது என்று ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டி உள்ளார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியின் தேர்வு முறையானது சிறந்த வீரரை சுற்றி இருக்க வேண்டுமே தவிர, சீனியர் வீரர்களை சுற்றி இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். “யாராவது நன்றாக விளையாடவில்லை என்றால், அவர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதனை தேர்வாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவர்கள் மூத்த வீரராக இருந்தாலும் சரி, புதிய வீரர்களாக இருந்தாலும் சரி சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஒரு வீரர் நல்ல உடல்தகுதியுடன் இருக்கும் வரை, அவர்களை அணியில் தேர்வு செய்ய முடியும். அணிக்கு பங்களிக்கவில்லை என்றால் அவர்கள் இளைஞர்களுக்கு வழி விட்டு விலக வேண்டும்” என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வரவிருக்கும் போட்டிகள்

டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய அணி பல மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது. தொடர்ச்சியாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த ஆண்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா, டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. மேலும் நியூசிலாந்து, பங்களாதேஷ் போன்ற அணிகளுடன் இந்தியாவில் விளையாட உள்ளது. அடுத்த மாதம் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ்க்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஒரு பகுதியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.