கடலில் மிதந்து வந்த பானத்தை பருகி மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் கடற்றொழில் அமைச்சரை சந்திப்பு

ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவேளை கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த பாணத்தை குடித்து மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்தனர்.

இறந்தவர்களுக்கான நஷ்ட ஈடு தொடர்பாக அமைச்சர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர், விரைவாக குறித்த நஷ்ட ஈடுகள் கிடைக்க உதவுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.