மும்பை: தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே தனது எக்ஸ்சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம், “எனது செல்போன் மற்றும் வாட்ஸ்-அப் முடக்கப்பட்டுள்ளது (ஹேக்). எனவே, என்னை செல்போனில் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம். வாட்ஸ்-அப்பில் தகவல்அனுப்பவும் வேண்டாம். இதுதொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சுப்ரியா சுலே நேற்று கூறும்போது, “என்னுடைய செல்போனை முடக்கியவர்கள், 400 டாலர் (ரூ.33,500) தர வேண்டும் என என்னுடைய குழுவினருக்கு தகவல் அனுப்பினர். இந்தத் தொகையை எங்கு வந்து தர வேண்டும் என கேட்டோம். ஆனால் வங்கிக் கணக்கை அனுப்பி அதில் அனுப்புமாறு கூறினர்” என்றார்.
இதனிடையே, சுப்ரியா சுலேவின் செல்போன், வாட்ஸ்-அப் நேற்று செயல்படத் தொடங்கியது.