இந்தியாவில் விற்கப்படும் சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லியை தலைமையிட மாகக் கொண்டு டாக்சிஸ் லிங்க்என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சர்க்கரை, உப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதுதொடர்பான ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான அயோடின் உப்பு, கல் உப்பு மற்றும் சர்க்கரையில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உள்ளன. இவை 0.1 எம்எம் முதல் 5 எம்எம் அளவில் காணப்படுகின்றன.

உணவு, தண்ணீர், காற்று வழியாக மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் நுழைகின்றன. இவை மனிதர்களின் நுரையீரல், இதயம், ரத்த நாளங்களில் படியக்கூடும்.

பிளாஸ்டிக் நுண் துகள்களால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வை நடத்திய டாக்சிஸ் லிங்க் அமைப்பின் நிறுவனர் ரவி அகர்வால் கூறும்போது, “பிளாஸ்டிக் நுண் துகள்கள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி விரிவான அறிக் கையை வெளியிட்டு உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.