டாக்கா,
வங்காளதேசத்தில் ஏற்பட்ட தொடர் வன்முறையை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு தப்பினார். இதையடுத்து வங்காளதேச ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார்.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததால், வங்காளதேசம்-இந்தியா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படுமா? என அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை ஆலோசகர் தவுஹித் ஹுசைனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவ்து;-
“இது மிகவும் கற்பனையான கேள்வி. யாராவது ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்தால், அந்த நாட்டுனான உறவில் எதற்காக விரிசல் ஏற்பட வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை. இந்த விவகாரத்தில் இந்தியா-வங்காளதேசத்தின் உறவில் பாதிப்பு ஏற்படாது. இரண்டு நாடுகளின் நலன்களும் தொடர்ந்து காக்கப்படும். இருதரப்புக்கும் இடையே நல்லுறவைப் பேண முயற்சிப்போம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.