ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் ஆஃப் ரோடு எஸ்யூவி மாடலில் மூன்று விதமான எஞ்சின் ஆப்சன் பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்ட இன்டீரியரில் கூடுதலாக இடவசதி கொண்ட கேபினை பெற்றிருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே இந்நிறுவனம் 5 கதவுகளை பெற்ற தார் ராக்சின் படங்களை வெளியிட்டு இருக்கின்றது என்பதனால் மிக நேர்த்தியான அதே நேரத்தில் உயர்தரமான ஒரு கம்பீரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக மூன்று டோர் கொண்ட தார் மாடலில் இருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்கள் கொண்டிருந்தாலும் கூட அதிலிருந்து வித்தியாசப்படுத்தும் வகையிலான முன்புற கிரில் அமைப்பு ஆறு ஸ்லாட்டுகளை மட்டுமே கொண்டிருக்கின்றது. உயரமான பம்பர் அமைப்பு மற்றும் வில் ஆர்ச் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள அளவில் மூன்று டோர்களுக்கு பதிலாக 5 டோர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
ஐந்துக்கு மேற்பட்ட நேரங்களை பெற உள்ள இந்த காரில் தற்பொழுது வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஐந்து கதவுகளைப் பெற்று இருந்தாலும் கூட இந்த மாடலும் ஐந்து இருக்கைகளை மட்டுமே பெற்று இருக்கும் எனவே மிகவும் தாராளமான இட வசதியை வழங்கும்.
பக்கவாட்டில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறத்தில் சி பில்லர் பகுதியில் ஒரு நேர்த்தியான டிசைன் அமைப்பானது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
டாப் வேரியண்டை பொருத்தவரை ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற மஹிந்திராவின் XUV 700 மற்றும் ஸ்கார்பியோ-என் போன்ற மாடல்களில் உள்ள சில வசதிகளை கொண்டிருக்கின்றது.
குறிப்பாக மூன்று ஸ்போக் உள்ள ஸ்டியரிங் வீல், 102.5 அங்குல இன்ஃபோடையிமென்ட் சிஸ்டத்தில் AdrenoX கனெக்டிவிட்டி அம்சங்கள், ஆப்பிள் கார் பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், மிகப்பெரிய பனராமிக் சன்ரூஃப், பின்புற இருக்கைகளுக்கும் ஏசி வென்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
மேலும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பொருத்தவரை ஆறு ஏர்பேக்குகள் அடிப்படையாக கொண்டு ஹில் ஹோல்டு வசதி எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், மிக உறுதியான கட்டுமானத்தை வெளிப்படுத்துகின்ற பாடி செல் டாப் வேரியண்டில் கூடுதலாக ADAS level-2 பாதுகாப்புத் தொகுப்பு, 360 டிகிரி கேமரா, பிளைன்ட் வியூ மானிட்டர் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கலாம்.
தார் ராக்ஸ் எஸ்யூவி மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மூன்று விதமான என்ஜின் ஆப்சன் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஒரு சில தகவல்களின் அடிப்படையில் 2.0 லிட்டர் எஞ்சின் ஆனது இரண்டு விதமான பவர் ஆப்ஷனில் வெளிப்படுத்தும் என கூறப்படுகின்றது மேலும் அனைத்து என்ஜினியிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆனது பெறக்கூடும் .மேலும் டாப் வேரியண்டுகளில் 4×4 ஆல் வீல் டிரைவ் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பதனால் பல்வேறு ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பயன்பாடுகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா என இரு மாடல்களுக்கும் சவாலாக புதிய ஐந்து கதவுகளை கொண்ட தார் ராக்ஸ் எஸ்யூவி ரூ.13 லட்சம் முதல் ரூ.18 லட்சத்திற்குள் எதிர்கொள்ள உள்ளது.