இலங்கை கடற்படையினரால், 2024 ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தலைமன்னார் ஊறுமலை மற்றும் பழைய பாலம் கடற்கரை பகுதிகளுக்கு அருகில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், அந்த கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய சுமார் இருநூற்று எட்டு (208) கிலோ பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படைக் கப்பலில் தலைமன்னார் ஊறுமலை மற்றும் பழைய பாலம் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கரையொதுங்கிய மூன்று (03) உரைகள் மற்றும் இரண்டு (02) பொதிகள்; சோதனைக்குட்படுத்தப்பட்டது. அங்கு, அந்த உரைகள்; மற்றும்; பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இருநூற்று எட்டு (208) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.