எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவிற்காக வழங்கப்படும் பெறுமதி பல்வேறு சரிபார்க்கை தற்போது சேர்க்கப்பட்டு சகல அரச சேவை ஊழியர்களுக்காகவும் ஒவ்வொரு 03 வருடங்களுக்கு ஒரு முறை திருத்தும் அடிப்படையில் வாழ்க்கைச் செலவுப் படியாக மாதாந்தம் 25,000 ரூபாவை வழங்குவதற்கு நிதி, தேசிய கொள்கைத் திட்டமிடல் அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்க சேவையில் ஆகக் குறைந்தது முதல் மாதச் சம்பளம் 24 சதவீதத்தால் அதிகரிக்கும் போது, வாழ்க்கைச் செலவுப் படியுடன் தலா வருமானம் 55,000 ரூபாவாக ஏனைய பதவிகளுக்காக அடிப்படைச் சம்பளம் அதற்கு இணங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் விபரித்தார்.
அவ்வாறே, வியாபார, அரசாங்கக் கம்பனிகள் மற்றும் வங்கிகள் தவிர்ந்த ஏனைய சகல அரச நிறுவனங்களுக்காக இப்புதிய சம்பள மற்றும் கொடுப்பனவு முறை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.