மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு இருக்கின்ற புதிய தார் ராக்ஸ் ஐந்து டோர்களைக் கொண்ட மாடல் ஆரம்ப விலை ரூபாய் 12.99 லட்சத்தில் துவங்குகிறது. சிறப்பான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கின்ற இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் மாடல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
மஹிந்திரா GLYDE
இலகு எடை மற்றும் சிறந்த கட்டுமானத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் புதிய தலைமுறை மஹிந்திரா GLYDE சேஸ் மிகவும் சிறப்பாக செயல்படுவதுடன் முன்புறத்தில் இன்டிபென்டென்ட் டபூள் விஸ்போன் மற்றும் பின்புறத்தில் ரிஜிட் ஆக்சில் உடன் பென்டா லிங்க் சஸ்பென்ஷன் உள்ளது.
சிறப்பான சஸ்பென்ஷன் இப்போது மற்றும் மேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்ற வகையிலான இந்த புதிய GLYDE சேஸிஸ் சிறந்த டிரைவிங் அனுபவத்தையும் மற்றும் சொகுசான பயணத்திற்கு ஏற்றதாகவும் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தார் ராக்ஸ் டிசைன்
அடிப்படையில் மூன்று டோர் கொண்ட தார் மாடலின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தாலும் அந்த மாடலுக்கும் தார் ராக்ஸ் மாடலுக்கும் வித்தியாசத்தை வழங்கும் வகையில் முன்பக்க கிரில் ஆறு ஸ்லாட்கள் கொண்டிருப்பதுடன் அதில் வழங்கப்பட்டுள்ள ஸ்லாட் ஆனது இரு பிரிவுகளாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் புராஜெக்டர் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டு ஆங்கில எழுத்து C-வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் சேர்க்கப்பட்டு மிகவும் கவர்ச்சிகரமாகவும் அதே நேரத்தில் ஆக்ரோஷமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலான முன்புற மற்றும் அதில் கொடுக்கப்பட்டுள்ள பேனல்கள் என அனைத்தும் இந்த எஸ் வி மாடலை மிகவும் ஸ்டைலிசாகவும் அதே நேரத்தில் முரட்டுத்தனமான காட்சி அமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் கொண்டு இருக்கும் மஹிந்திரா வடிவமைத்துள்ளது.
அடுத்ததாக பக்கவாட்டு அமைப்பில் இப்பொழுது இரண்டு டோர்கள் இடம்பெற்று டாப் வேரியண்டுகளில் டூயல் டோன் 19 அங்குல அலாய் வீல் மற்றும் பேஸ் வேரியன்ட் மற்றும் மிட் வேரியண்டில் 18 அங்குல அலாய் வீல் அல்லது ஸ்டீல் வீல் கொடுக்கப்படுகின்றது.
பின்புறத்தில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு டோர் தனியாகவே, மேற்புறத்தில் உள்ள ரியர் குவாட்டர் கிளாஸ் தனியாக கொடுக்கப்பட்டு திறக்கும் வகையில் அமைந்த சிறப்பான பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது.
தார் ராக்ஸ் இன்டீரியர்
5 இருக்கைகளை கொண்டு மூன்று ஸ்போக் உடன் கூடிய ஸ்டீயரிங் வீல் பெற்று டிஜிட்டல் கிளஸ்டர் கொண்டு 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் AdernoX சார்ந்த கனெக்ட்விட்டி வசதிகளை பெற்றிருக்கின்றது.
644 லிட்டர் பூட்ஸ்பேஸ் பெற்று பழுப்பு நிறத்துடன் லெதரெட் இருக்கைகளுடன் கூடிய டூயல் டோன் தீம் மற்றும் கான்ட்ராஸ்ட் பிட்களுடன் அடர் பழுப்பு நிற டேஷ்போர்டினை கொண்டுள்ளது. 9 ஸ்பீக்கர்களுடன் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், மிகப்பெரிய பனராமிக் சன்ரூஃப், பின்புற இருக்கைகளுக்கும் ஏசி வென்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
35க்கு மேற்பட்ட பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், மூன்று புள்ளி சீட் பெல்ட் அனைத்து இருக்கைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ADAS level-2 பாதுகாப்புத் தொகுப்பு, 360 டிகிரி கேமரா, பிளைன்ட் வியூ மானிட்டர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது.
தார் ராக்ஸ் எஞ்சின்
மஹிந்திரா தார் ராக்ஸில் துவக்க நிலை மாடல்களில் உள்ள இரண்டு எஞ்சின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. 2.0-லிட்டர், 160bhp மற்றும் 330Nm வளரும் m-Stallion டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2-லிட்டர், mHawk டீசல் இன்ஜின் 153bhp மற்றும் 330Nm. ஆறு-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இதில் பதிப்புகள் 4×2 டிரைவ் மட்டும் கிடைக்கும்.
டாப் மாடல்களில் 2.0-லிட்டர், 177bhp மற்றும் 380Nm வளரும் m-Stallion டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2-லிட்டர், mHawk டீசல் இன்ஜின் 175bhp மற்றும் 370Nm. ஆறு-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இதில் பதிப்புகள் 4×4 டிரைவ் மட்டும் கிடைக்கும்.
ஆஃப் ரோடு நுட்பங்கள்
ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் 650mm தண்ணீர் உள்ள இடங்களிலும் பயணிக்கும் வகையிலும் 2580 மில்லி மீட்டர் வீல் பேஸ் ஆனது கொண்டிருக்கின்றது. Terrain modes மூலம் மணல், பனி, மற்றும் சேறு (Sand, Mud, Snow) என மூன்று நிலங்களுக்கு ஏற்ற டிரைவிங் மோடுகள் உள்ளது.
கிராவல் ஸ்மார்ட் அம்சத்தையும் (CS-Smartcrawl) பெறுகிறது. 2.5 கிமீ முதல் 30 கிமீ வரை அனுமதிக்கின்றது. Intelli Turn Assist மூலம் மிக குறுகலான வளைவில் பின்புற சக்கரங்களை லாக் செய்து மிக இலகுவாக ஸ்டீயரிங் திருப்புவதற்கு இந்த சிறப்பம்சம் உதவுகின்றது.
Mahindra Thar ROXX price list
- Thar ROXX MX1 Petrol RWD MT – ₹12.99 லட்சம்
- Thar ROXX MX1 Diesel RWD MT – ₹13.99 லட்சம்
- Thar ROXX MX3 Petrol RWD MT – ₹14.99 லட்சம்
- Thar ROXX MX3 Diesel RWD MT – ₹15.99 லட்சம்
- Thar ROXX AX3L Diesel RWD MT – ₹16.99 லட்சம்
- Thar ROXX MX5 Diesel RWD MT – ₹16.99 லட்சம்
- Thar ROXX AX5L Diesel RWD AT – ₹18.99 லட்சம்
- Thar ROXX AX7L Diesel RWD MT – ₹18.99 லட்சம்
செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் டீலர்களிடம் டெஸ்ட் டிரைவ் மாடல்கள் கிடைக்க துவங்கும் அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட்டு தசரா பண்டிகை முதல் தார் ராக்ஸ் எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் டெலிவரி வழங்கியுள்ளது.