சென்னை: பொதுமக்களின் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 60 பேர் கொண்ட தரக்கட்டுப்பாட்டு குழு முறைகேட்டில் ஈடு பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்ட 60 பேர் கொண்ட தரக்கட்டுப்பாட்டு குழு தனது முதல் நாள் பணியில் சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்ட 1000 புகார்களில் 180 புகார்கள் நிவர்த்தி செய்யப்படாமல் மூடப்பட்டுவிட்டதாகக் கண்டறிந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளின் மெத்தனத்தாலும், […]