ஆளும் பாஜக அரசின் கனவு திட்டங்களில் ஒன்று அயோத்தி ராமர் கோயில். பல்வேறு திட்டங்கள், பல நூறு கோடிகளில் இந்த கோயில் கட்டப்பட்டது. முழுமையாக காட்டிமுடிக்கும் முன்பே ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழாவை நடத்தப்பட்டது. தற்போது மூலவரை தரிசிக்க பக்தர்கள் வந்து கொண்டிருகின்றனர். இந்த நிலையில் அயோத்தியின் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள ராமர் பாதையில், பெரும் செலவில் அலங்கார மூங்கில் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது.
அந்த விளக்குகள் திருடப்பட்டுவருவதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3800 மூங்கில் விளக்குகள், 36 ப்ரொஜெக்டர் விளக்குகள் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. யாஷ் எண்டர்பிரைசஸ், கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ் ஆகிய நிறுவனங்களால் இந்த திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது, அயோத்தியின் மேம்பாட்டு ஆணையம் விளக்குகளை நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிறுவனத்தின் பிரதிநிதி சேகர் சர்ம அளித்த புகாரில், “ராமர் பாதையில் முதலில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 ப்ரொஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டன. அனைத்து விளக்குகளும் மார்ச் 19-ம் தேதி வரை கணக்கிடப்பட்ட நிலையில், மே 9-ம் தேதி ஆய்வு செய்ததில் கணிசமான எண்ணிக்கையிலான விளக்குகள் காணாமல் போனது தெரியவந்தது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மே மாதமே திருட்டுக் குறித்து அறிந்த போதிலும், ஆகஸ்ட் 9-ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக ராம் ஜென்மபூமி அமைப்பு மூலம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், திருட்டுக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து கைது செய்ய அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அயோத்தியில் ராமர் பாதை என்று அழைக்கப்படும் பகுதியில் நிகழ்ந்த திருட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கண்காணிப்பின் செயல்திறன் குறித்தும் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88