மஹிந்திரா தார் ராக்ஸ் Vs தார் ஒப்பீடு விலை, எஞ்சின் விபரம்

மஹிந்திராவின் 5 டோர் பெற்ற தார் ராக்ஸ் மாடலுக்கு எதிராக உள்ள 3 டோர் கொண்ட தார் எஸ்யூவி என‌ இரண்டுக்கும் இடையில் உள்ள முக்கிய வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம். குறைந்த வசதிகளை மட்டும் பெற்று இருக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் மாடலுக்கு எதிராக அதிக வசதிகள் மற்றும் நவீன தலைமுறைகளுக்கு ஏற்ற பல்வேறு அம்சங்களை புதிய தார் ராக்ஸ் கொண்டிருக்கின்றது.

தார் ராக்ஸ் vs தார்: எஞ்சின் ஒப்பீடு

தார் மாடலில் 118 hp பவர், 300 NM டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின், 130 hp பவர், 300 NM டார்க் வெளிப்படுத்துகின்ற 2.2 லிட்டர் டீசல் எஞ்சின், கூடுதலாக 150 hp பவர், 300 NM (320 NM ஆட்டோமேட்டிக்) டார்க் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் என மொத்தம் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

இதில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் RWD மட்டும் உள்ளது. 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் RWD/4WD உள்ளது. இறுதியாக, 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் RWD/4WD உள்ளது.

தார் ராக்ஸ் மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் கூடுதலாக 152 hp/175 hp பவர், 330 NM/370 NM டார்க் வழங்கும், கூடுதலாக 162 hp/177 hp பவர், 330 NM (380 NM ஆட்டோமேட்டிக்) டார்க் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் என மொத்தம் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் RWD/4WD உள்ளது. இறுதியாக, 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் RWD உள்ளது.

மஹிந்திரா தார்

மஹிந்திரா தார் ராக்ஸ்

எஞ்சின்

1.5-litre diesel

2.2-litre diesel

2-litre turbo-petrol petrol

2.2-litre diesel

2-litre turbo-petrol petrol

பவர்

118 hp

130hp

150 hp

152 hp/175 hp

162 hp (MT)/ 177 hp (AT)

டார்க்

300 Nm

300 Nm

300 Nm/ 320 Nm (AT)

330 Nm and 370 Nm

330 Nm (MT)/ 380 Nm (AT)

கியர்பாக்ஸ்

6-speed MT

6-speed MT/ 6-speed AT

6-speed MT/ 6-speed AT

6-speed MT/ 6-speed AT

6-speed MT/ 6-speed AT

டிரைவ்

RWD

RWD/ 4WD

RWD/4WD

RWD/ 4WD

RWD

தார் ராக்ஸ் vs தார்: அளவுகள்

தார் மாடல் நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் 3,985மிமீ பெற்றிருந்த நிலையில் புதிதாக வந்துள்ள தார் ராக்ஸ் 4,428 மிமீ நீளம் கொண்டிருக்கின்றது இதன் மூலம் கூடுதலான வீல் பேஸ் கொண்டு அதிகப்படியான இட வசதியை வழங்குகின்றது.

மூன்று கதவுகளை கொண்ட மாடலில் பயன்படுத்த முடியாத பூட்ஸ்பேஸ் இருந்த நிலையில் தற்பொழுது பூட்ஸ்பேஸ் 644 லிட்டர் கொள்ளளவு ஆக விரிவடைந்து மிகப்பெரிய அளவில் இட வசதிக்கான அம்சமாக பார்க்கப்படுகின்றது.

Dimensions மஹிந்திரா தார் ராக்ஸ் மஹிந்திரா தார்
நீளம் 4428 mm 3985 mm
அகலம் 1870 mm 1820 mm
உயரம் 1923 mm 1844-1855 mm
வீல்பேஸ் 2850 mm 2450 mm

தார் ராக்ஸ் vs தார்: டிசைன்,இன்டிரியர்

அடிப்படையில் மூன்று டோர் தார் மாடலில் இருந்து பெறப்பட்டிருக்கின்ற ஐந்து டோர் தார் ராக்ஸ் மாடலானது பல்வேறு டிசைன் மாற்றங்களை முன்புறத்திலும் பக்கவாட்டிலும் பெற்றிருப்பதுடன் சி-பில்லர் பகுதியில் ஒரு முக்கோண வடிவ கான்ட்ராஸ்ட்டான கருப்பு நிற குவாட்டர் கிளாஸ் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் வழக்கம் போல ஸ்பேர் வீல் ஆனது பொருத்தப்பட்டு முழுமையாக எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தார் மாடலை பொருத்தவரை எல்இடி விளக்குகள் பெரும்பாலும் கொடுக்கப்படவில்லை.

தார் ராக்ஸ் காரில் பனேரோமிக் சன்ரூஃப், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே 360 டிகிரி கேமரா, 6 ஏர் பேக்குகள், லெவல் 2 ADAS போன்ற அம்சங்கள் உள்ளது.

தார் காரில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அனலாக் கிளஸ்டர், மேனுவல் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ரிவர்ஸ் கேமரா, 2 ஏர் பேக்குகள் போன்ற அம்சங்கள் உள்ளது.

தார் ராக்ஸ் vs தார்; விலை ஒப்பீடு

3 டோர் பெற்ற மஹிந்திரா தார் எஸ்யூவி விலை ரூ.11.35 லட்சம் முதல் துவங்கி ரூ.17.60 லட்சம் வரை கிடைக்கின்றது.

5 டோர் பெற்ற மஹிந்திரா தார் எஸ்யூவி விலை ரூ.12.99 லட்சம் முதல் துவங்கி ரூ.20.49 லட்சம் வரை கிடைக்கின்றது. ஆனால் தார் ராக்ஸ் 4WD வேரியண்ட் விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

இந்த இரண்டு மாடல்களுக்கு எதிராக இந்திய சந்தையில் உள்ள மாருதி சுசுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா என இரண்டும் நேரடியாக எதிர் கொள்ளும் நிலையில் மற்ற மாடல்களை பொருத்தவரை ரூபாய் 12 லட்சம் முதல் துவங்கி 25 லட்சத்திற்குள் அமைந்திருக்கின்ற நடுத்தர எஸ்யூவிகளும் இந்த மாடலுக்கு சவாலாக விளங்குகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் மாடல் கடுமையான சவாலாக தார் ராக்ஸ் எஸ்யூவிக்கு ஏற்படுத்த உள்ளது.

Mahindra Thar Earth Edition suv price

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.