ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சொந்தமாக தயாரித்து உள்ள பாரத்செல் 4680 ஆனது முதல் முறையாக ரோட்ஸ்டெர் மற்றும் ஏப்ரல் 2025ல் வரவுள்ள மூன்றாவது தலைமுறை ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
4680 செல் என்றால் உருளை வடிவ லித்தியம்-அயன் பேட்டரி மின்சார வாகனங்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயருக்கான காரணம் விட்டம் 46 மில்லிமீட்டர் மற்றும் உயரம் 80 மில்லிமீட்டர் ஆகும்.
உலகின் பிரசித்தி பெற்ற எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனமும் இது போன்ற பேட்டரி 4680 செல் மாடல்களை தான் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும் அதனை பின்தொடர்ந்தே தற்பொழுது ஓலா நிறுவனமும் இது போன்ற ஒரு பேட்டரி செல்லை வடிவமைத்திருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளதாக ஓலா தலைவர் அகர்வால், “நாங்கள் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யவில்லை, நாங்களே உருவாக்கினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது ஓலா நிறுவனம் பயன்படுத்தி வருகின்ற 2170 செல்களை விட கூடுதல் வேகத்தில் சார்ஜிங் செய்யவும் மற்றும் சிறப்பான வகையில் ஆற்றலை சேமிக்கும் திறன் போன்றவை எல்லாம் இந்த புதிய பாரத் செல்லில் கொண்டிருப்பதாக என இந்நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது.
பாரத் 4680 லித்தியம்-அயன் செல் பேக்குகள் 2170 செல்களை விட ஐந்து மடங்கு அதிக ஆற்றலை (275 Wh/kg) பெற்றுள்ளன. அவை தற்போது ஆட்டோமொபைல் பயன்பாடுகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. செல் பரந்த இயக்கத்திற்கு (10-700C), 1,000 க்கும் மேற்பட்ட சார்ஜ் சுழற்சிகளுடன் நீண்ட ஆயுட்காலம் மற்றும் 13 நிமிடங்களில் 50% சார்ஜ் என சிறந்த வேகமாக சார்ஜ் செய்யும் திறன் உள்ளது.
மேலும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள MoveOS 5 மூலம் ஓலா மேப் மூலம் இயக்கப்படும் நேஙிகேஷன், நேரலை இருப்பிடத்தை பகிர்தல், சாலைப் பயண முறை உள்ளிட்ட பல புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட் சார்ஜிங், ஸ்மார்ட் பார்க்கிங், டயர் பிரெஷர் மானிட்டர், வாய்ஸ் கண்ட்ரோல், க்ருட்ரிம் ஏஐ அசிஸ்டண்ட் மூலம் இயங்கும் நுண்ணறிவு மூலம் செயல்திறனை மேம்படுத்தும் வசதிகளுடன் MoveOS 5 இயங்குதளத்தின் பீட்டா தறபொழுதுள்ள பயனர்களுக்கு OTA அப்டேட் மூலம் தீபாவளி 2024 கிடைக்கும்.