ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பிரச்சாரங்களில் ஈடுபடுதல் சட்ட விதிகளை  பின்பற்றுமாறு கோரிக்கை  

 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பிரச்சாரங்களில் ஈடுபடுதல் சட்ட விதிகளை பின்பற்றுமாறு வேட்பு மனுத் தாக்கல் செய்த நிகழ்வின் போது உரையாற்றிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க  கோரிக்கை

 விடுத்தார்.
 
ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான சட்டத்தின் 74 ஆவது சரத்தின் படி ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து (ஆகஸ்ட் 15 ஆம் திகதி) தேர்தல் வாக்கெடுப்பு நிறைவு பெறும் வரை வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை அதிகரிப்பதற்காக அல்லது வேறு ஒரு வேட்பாளரைத் தாழ்த்துவதற்காக பிரகரங்களை விநியோகித்தல், காட்சிப்படுத்தல் மற்றும்  சட்ட விதிகளுக்கு முரணாகவும் செயற்படுதல் போன்றவற்றை சகல  வேட்பாளர்களினதும் அவர்களின் ஆதரவர்களதும் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
 
இச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அவசியமான ஆலோசனைகள் பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ளது.
 
தேர்தல் பிரசார விளம்பரம் அல்லது வேறு விதமான புகைப்பட விளம்பரம் அல்லது அவ்வாறான ஓவியம் அல்லது இலட்சினை மற்றும் கொடி போன்றவற்றை தேர்தல் கூட்டம் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள தினத்தில் அந்த இடத்தில் அல்லது அதை அண்டிய சுற்றி அல்லது முறையாக அனுமதி பெறப்பட்ட அலுவலகங்களில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.