தேர்தல் காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தினத்திலிருந்து (ஆகஸ்ட் 15) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த ஒரு வார காலம் ஊர்வலம் செல்வதற்குத் தடை விதிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம.ஏ. எல்.ரத்னாயக்க நேற்று (15) தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இவ்வாறான சட்ட விரோதமாக ஊர்வலங்களை நடாத்தினால், அவற்றை வீடியோவாகப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும்.
மேலும், பொலிஸாரின் அனுமதியுடன் மாத்திரமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும். வாக்குகளை பெறுவதற்காக அன்பளிப்புகள், இலஞ்சம் வழங்குதல், கட்டாயப்படுத்துதல் என்பன குற்றங்களாகக் கருதப்படும்.
அத்துடன், சமய நிகழ்ச்சிகள் ஊடாக அல்லது வணக்கஸ்தலங்களில் நடாத்தப்படும் கூட்டங்கள் ஊடாக ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை அதிகரித்தல் போன்றவை இவற்றுள் அடங்கும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர் எம் ஏ எல் ரத்னாயக்க வலியுறுத்தினார்.