தி.நகரில் பெண் ஊழியர்கள் கழிவறையில் செல்போன்… பெயின்டர் சிக்கியது எப்படி?

சென்னை வடபழனியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர் பாண்டி பஜார் பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி மதியம் பெண் ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு சென்றார். அப்போது அந்தக் கழிவறையின் ஜன்னல் பகுதியில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அந்தப் பெண் ஊழியர் பார்த்தார். உடனே அந்த செல்போனை எடுத்தபோது அதில் பெண்கள் கழிவறைக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர், சக ஊழியர்களிடம் விவரத்தை தெரிவிக்க வெளியில் வந்தார். அப்போது கழிவறை பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணை மிரட்டி செல்போனைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றார்.

கைது

இதையடுத்து இந்தத் தகவலை பெண் ஊழியர், கடையில் உள்ள சக ஊழியர்களிடமும் ஓனரிடம் தெரிவித்தார். அதன்பிறகு இந்தச் சம்பவம் குறித்து சௌந்திரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞர் குறித்து விசாரித்தனர். விசாரணையில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மணிகண்டன் (33) எனத் தெரிந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீஸார், கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மணிகண்டன் குறித்து விசாரித்தபோது அவர், இவர் பெயின்ட் அடிக்கும் வேலைக்காக அங்கு வந்திருக்கிறார். அப்போது பெண்கள் பயன்படுத்தும் கழிவறை இருந்ததைப் பார்த்த மணிகண்டன், ஜன்னல் வழியாக யாருக்கும் தெரியாமல் செல்போன் மூலம் வீடியோ எடுத்தது தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.