கொல்லம்: கேரளாவில் முதல் மெய்நிகர் நீதிமன்றத்தை கேரள உயர்நீதிமன்றம் கொல்லம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவை, ராஜேஷ் பிண்டால் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தின் இதர டிஜிட்டல் சேவைகளையும் தொடங்கிவைத்தனர். மெய்நிகர் நீதிமன்றத்தை 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். வழக்குப்பதிவு, வழக்கு அனுமதி, ஆஜராவது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும்.
இந்த மெய்நிகர் நீதிமன்றம் செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இங்கு செக் மோசடி வழக்குகள் முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. நீதிமன்ற வளாகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் மெய்நிகர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் இருந்து தகவல் பெற முடியும்.