வாட்ஸ்அப் செயலி, தகவல் பரிமாற்றம் மற்றும் ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பும் மீடியமாக மட்டுமல்லாமல், ஆடியோ வீடியோ அழைப்புகள் என அதனை பயன்படுத்தும் பயனர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். இந்நிலையில், சாதாரண தொலைபேசி அழைப்புகளில் வரும் ஸ்பேம் கால்களை போலவே, வாட்ஸ் அப் செயலியிலும், மிக அதிகமாக ஸ்பேம் மெஸ்சேன்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தலும் உள்ளது.
வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வரும் நிலையில், விரைவில் ஸ்பேம் தகவல் பிரச்சனைக்கும் முடிவு கட்ட, வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டு வர உள்ளது. முன் பின் தெரியாத கணக்குகளில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்கும் அம்சம் வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Block unknown accounts messages என்ற இந்த அம்சம் WhatsApp இல் உங்களுக்கு வரும் அறியப்படாத கணக்குகளிலிருந்து செய்திகளை பிளாக் செய்யும். இந்த அம்சம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
அறியப்படாத கணக்குகளில் இருந்து வரும் செய்திகள் தடுக்கும் அம்சம்
Wabetainfo வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், ஆண்ட்ராய்டு 2.24.17.24 அப்டேட்டிற்கான வாட்ஸ்அப் பீட்டா மூலம் இந்த புதிய அம்சம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, அறியப்படாத கணக்குகளில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க புதிய அம்சம் வேலை செய்யும். இந்த அம்சத்தின் மூலம், WhatsApp பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முன்பை விட வலுவாக இருக்கும். இது தவிர வாட்ஸ்அப்பில் வரும் ஸ்பேம் மெசேஜ்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும். இந்த செட்டிங்கை ஆன் செய்த பிறகு, கூடுதலாக உங்கள் மொபைலில் சேமிப்பகத்தை விரைவாக நிரப்பும் பிரச்சனையும் முடிவுக்கு வரும்.
இந்த அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்டும் அறிக்கையில் பகிரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் மேம்பட்ட செட்டிங் அமைப்புகளில் தெரியாத கணக்கு செய்திகளைத் தடு என்ற நிலைமாற்றத்தைப் பெறுவார்கள் என்பதை ஸ்கிரீன்ஷாட்டில் காணலாம். இந்த மாற்றத்தை ஆக்டிவேட் செய்த பிறகு, தெரியாத கணக்கிலிருந்து வரும் செய்திகளின் வரம்பை மீறினால், WhatsApp தானாகவே அந்தக் கணக்கைத் பிளாக் செய்யும். அந்தக் கணக்கை நீங்கள் தனியாகத் பிளாக் வேண்டியதில்லை.
தற்போது இந்த அம்சம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் நிலையில் உள்ளது. உடனடி செய்தியிடல் தளம் அதன் பயனர்களுக்கு இந்த அம்சத்தை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், இந்த அம்சம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால்,இது அறிமுகமாகும் சமயத்தில் கூடுதல் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.