எஸ்பிஐ (SBI) மற்றும் பிஎன்பி (PNB) பங்குகள் குறுகிய காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகளாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இது கர்நாடக அரசின் அனைத்து வங்கி கணக்குகளையும உடனடியாக மூட வேண்டும். அந்த கணக்குகளில் இருக்கும் வைப்புத் தொகைகள் திரும்ப பெற வேண்டும். அதோடு மொத்தம் எவ்வளவு நிதி இருக்கிறது என்பதையும் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என அதிரடியான ஓர் அறிவிப்பை கர்நாடகா அரசு பிறப்பித்துள்ளது.
மேலும் வங்கிகளில் புதிய டெபாசிட்கள் செய்வதையும் தடை செய்துள்ளது. கர்நாடக அரசின் இந்த உத்தரவானது அரசு துறைகளுக்கு மட்டும் அல்ல, பொது நிறுவனங்கள். பெரு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக் கழங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
மோசடி குற்றச்சாட்டுகள்
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்கள், சரியான நேரத்தில் திரும்ப தரத் தவறிய நிலையில், தவறாக கையாளப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வந்துள்ளது. ஏற்கனவே இது குறித்த எச்சரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் இருந்து வந்தது. இந்த சூழலில் தான் தற்போது கர்நாடக அரசு இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அடுத்தடுத்த மோசடிகள் அம்பலம்
கடந்த நவம்பர் 2012 கர்நாடகா தொழில்துறை மேம்பாட்டு வாரியம் கர்நாடகாவின் ராஜாஜி நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 25 கோடி ரூபாய் டெபாசிட் செய்தது. அந்த டெபாசிட் தொகையானது முதிர்வடைந்த நிலையில், 13 கோடி ரூபாய் மட்டுமே திரும்ப செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் மீதமுள்ள 12 கோடி ரூபாய் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்று 2013-ல் கர்நாடக மாநில மாசு வாரியம், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, அவென்யூ ரோடு கிளையில், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளது. இந்த டெபாசிட் தொகையை போலி சான்றிதழ் மூலம் ஒரு தனியார் நிறுவனத்தின் கடனுக்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பிறகு டெபாசிட் தொகையை திரும்ப செலுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாதிப்பு இருக்குமா?
கர்நாடக அரசின் இந்த தடை உத்தரவானது வங்கிகள் மீதான நம்பகத் தன்மையை குறைக்க வழிவகுக்கலாம். இது வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்டுகள் குறைய வழிவகுக்கலாம். அதிகரித்து வரும் போட்டிகளுக்கு மத்தியில், பொதுத்துறை வங்கிகள் மீதான இந்த முறைகேடு குற்றச்சாட்டுகள், நம்பிக்கையின்மையை வலுப்படுத்தலாம். ஆக இது வங்கிகளின் நீண்ட கால வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது அவற்றின் வருவாய் சரிவு, பங்குகள் சரிவுக்கும் வழிவகுக்கலாம்.
பங்குகள் விலை நிலவரம்?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்கானது கிட்டத்தட்ட 1% அதிகரித்து, ஆகஸ்ட் 16 அன்று வர்த்தகத்தில் 809.55 ரூபாயாக காணப்படுகிறது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 912 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 543.20 ரூபாயாகும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலையானது கிட்டத்தட்ட 1% குறைந்து, 112.65 ரூபாயாக காணப்படுகிறது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 142.90 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 60.55 ரூபாயாகும்.
இவ்விரு பொதுத்துறை வங்கி பங்குகளுமே கர்நாடக அரசின் உத்தரவால் சற்று வருவாய் சரிவை சந்திக்கும் என்றாலும், இது அவற்றின் மொத்த வருவாயில் பெரிய அளவு பாதிப்பு இருக்காது என நம்பப்படுகிறது. எனினும் வங்கிகள் மீதான நம்பிக்கை என்பது இங்கு கேள்விக் குறியாகியுள்ளது. செப்டம்பர் 20-க்குள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள அறிக்கையானது, கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. மேற்கண்ட இரு வங்கி பங்குகளுமே டெக்னிக்கலாக தினசரி மற்றும் வார சார்ட் பேட்டர்னில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. ஆக குறுகிய காலத்தில் சிறு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
General Disclaimer and Terms & Conditions of the research report
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL +
THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
முதலீடு செய்வதற்கு முன்னால் ஒரு செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசித்த பின்னரே செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காக காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.