vivo v40 5g :விவோ நிறுவனம் அண்மையில் வெளியிட்ட Vivo V40 5G போனின் விற்பனை இன்று (ஆகஸ்ட் 19, 2024) தொடங்கியது. இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் மதியம் 12 மணிக்கு இந்த விற்பனை தொடங்கிய விற்பனையில் சிறந்த தள்ளுபடி சலுகைகளில் விவோ வி40 5ஜி போன்கள் கிடைக்கின்றன. விவோ வி40 5ஜி ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே மற்றும் குவால்காமின் சக்திவாய்ந்த செயலி பொருத்தப்பட்டுள்ளது.
50MP கேமராவுடன், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரிகொண்ட விவோ V40 மொபைலின் விலை மற்றும் தள்ளுபடி சலுகை விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
விவோ வி40 5ஜி மாடல்கள்
ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, விவோ வி40 5ஜியை பல வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 8ஜிபி + 128ஜிபி, 8ஜிபி + 256ஜிபி மாடல், டாப் வேரியன்ட் 12ஜிபி + 512ஜிபி என மூன்று மாடல்களில் விவோ வி40 போன் வெளியாகியிருக்கிறது.
விலை விவரம்
8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.34,999
8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.36,999
டாப் வேரியன்ட் 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ.41,999
எக்ஸ்சேஞ்ச் சலுகை
முன்னணி வங்கிகளின் கிரெடிட் கார்டு மூலம், விவோ வி40 போனுக்கான பணம் செலுதினால், விலையில் இருந்து ரூ.3700 தள்ளுபடி கிடைக்கும். அதேபோல, கட்டணமில்லா EMI மற்றும் ரூ.35,950 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் தற்போது கிடைக்கிறது.
Vivo V40 விவரக்குறிப்புகள்
Vivo V40 5G போன் 1.5K ரெசல்யூசன் மற்றும் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் புதுப்பிப்பு விகிதம் 120Hz, தொடு மாதிரி விகிதம் 480Hz மற்றும் உச்ச பிரகாசம் 4500 nits என்ற அளவில் உள்ளது. HDR10+ டிஸ்ப்ளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 செயலி, அட்ரினோ 720 ஜிபியு மற்றும் 512ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படுகிறது.
விவோவின் புதிய ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் உள்ளது. புகைப்படங்களை கிளிக் செய்வதற்கு, மொபைல் போனில் 50எம்பி மெயின் மற்றும் 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸும், செல்ஃபி எடுக்க 50எம்பி ஆட்டோஃபோகஸ் முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி
Vivo V40 5G போனில், பெரிய அளவிலான 5500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால், 80W வேகமான சார்ஜிங் ஆகிறது. இரட்டை 4G VoLTE, 5G, Wi-Fi, GPS, Bluetooth, Glonass, QZSS மற்றும் USB Type-C போர்ட் அகியவை, விவோவின் புதிய போனின் இணைப்பு விவரக்குறிப்புகள் ஆகும்.
இதர விவரங்கள்
புதிய Vivo V40 5G ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார் என பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. போனின் எடை 190 கிராம் என்பதும், IP68 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.