ஓலா மின்சார மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ரோஸ்டர் எக்ஸ், ரோட்ஸ்டர், ரோட்ஸ்டர் ப்ரோ என ரோட்ஸ்டர் வரம்பிற்கு உட்பட்ட ஓலா எலக்ட்ரிக் பைக் போர்ட்ஃபோலியோவில் மூன்று பைக்குள் அறிமுகமாகின்றன. இந்த பைக்குகளின் டெலிவரி அடுத்த ஆண்டு நான்காம் காலாண்டில் தொடங்கும். அதில், ரோட்ஸ்டர் புரோ டெலிவரி 2026 இறுதி காலாண்டில் டெலிவரி ஆகும்.
மின்சார மோட்டார்சைக்கிள் பிரிவில் மூன்று மாடல்களை அறிவித்துள்ள ஓலா, ரைட்-ஹெய்லிங் சேவையை ஓலா நுகர்வோர் என மறுபெயரிட்டுள்ளது, ONDC உடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்த ஓலா, துரிதமான வர்த்தக தேவைகளை பூர்த்தி செய்ய தானியங்கு கிடங்கு தீர்வுகளையும் அறிமுகப்படுத்தியது.
இவற்றைத்தவிர, ஓலா தனது க்ருட்ரிம் முயற்சியின் கீழ் 2026 ஆம் ஆண்டுக்குள் AI, ஜெனரல் கம்ப்யூட்டிங் மற்றும் எட்ஜ் ஆகியவற்றிற்கான சிப்களை உள்நாட்டிலேயே வடிவமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஓலாவின் வருடாந்திர வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால், தற்போது இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் மூன்றில் இரண்டு பங்கு மோட்டார் சைக்கிள்களைக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ஸ்கூட்டர் பிரிவில் மக்கள் EV வாகனங்களை ஏற்றுக் கொள்வதற்கான முயற்சியில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம், எங்களின் எதிர்கால தயாரிப்புகளின் போர்ட்ஃபோலியோவுடன், நாங்கள் இப்போது எங்கள் மோட்டார் சைக்கிள்கள் மூலம் EV வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன்களை நிறுவுவதில் கவனம் செலுத்துகிறோம்,” என்று கூறினார்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஓலாவின் ‘பாரத் 4680’ செல் மற்றும் பேட்டரி பேக் Q1 FY26 முதல் அதன் சொந்த வாகனங்களுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அகர்வால் கூறினார். இரு சக்கர வாகனங்களுக்காக அதன் புதிய Gen-3 இயங்குதளத்தையும் ஓலா, தனது வருடாந்திர நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது.
ரோட்ஸ்டர் வரம்பிற்கு உட்பட்ட ஓலா எலக்ட்ரிக் பைக் போர்ட்ஃபோலியோவில் ரோஸ்டர் எக்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ ஆகியவற்றின் விலைகள் என்ன தெரியுமா?
ரோஸ்டர் எக்ஸ் – ரூ.74,999
ரோட்ஸ்டர் – ரூ.1,04,999
ரோட்ஸ்டர் ப்ரோ – ரூ.1,99,999
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவில், பாரம்பரிய வர்த்தகத்தின் தடைகள் இல்லாமல் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான நுகர்வோர் அணுகலை வழங்குவதற்கான முயற்சிகளை நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சம் 2W EVகளை பயன்படுத்த ஓலா திட்டமிட்டுள்ளது. சிக்கலான AI பணிச்சுமைகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட இந்தியாவின் முதல் AI சிலிக்கான் சிப்பை ’க்ருத்ரிம்’ வடிவமைத்து உற்பத்தி செய்யும் என்று அகர்வால் கூறினார். இந்தியாவின் தொழில்நுட்ப இறையாண்மையை அடைவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும், வேகமான மற்றும் திறமையான AI அமைப்புகளை உருவாக்க இந்த சிப் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.