AC Alert: வீட்ல விண்டோ ஏசி வைக்கறது ஒரு குத்தமா? ரூல்ஸ் ஃபாலொ பண்ணலைன்னா ஜெயில் தான்!

உங்கள் வீட்டின் ஜன்னலில் ஏசி பொருத்தப்பட்டுள்ளதா? கவனமாக இல்லை என்றால் நீங்கள் சிறைக்குச் செல்லலாம்… அதிர்ச்சியாக உள்ளதா? உண்மை தான், வீடு நமதாக இருந்தாலும் அது பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தண்டனையை நாம் தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். பொதுவாக, வீட்டில் ஏசி வைப்பது, பூச்செடிகள் வைப்பது போன்றவை இயல்பாக அனைவரின் வீடுகளிலும் நடைபெறும் வழக்கமான நிகழ்வு தான். ஆனால் அது ஒருவரின் உயிரைப் பறித்தால்?

டெல்லியில் கரோல் பாக் பகுதியில், சாலையில் இருந்தவர் மீது வீட்டில் இருந்து விழுந்த ஏசி, அவருடைய உயிரைப் பறித்தது. இந்த கொடூர ஆனால், தவிர்க்க முடிந்த ஒரு செயலால் அப்பாவி ஒருவரின் உயிர் பறிபோனது. இந்த ஏசி விழுந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

ஒரு நொடியில் உயிரைப் பறித்த இந்த விபத்துக்கு காரணம், வீட்டில் ஏசி பொருத்தப்பட்ட போது கவனத்துடன் செயல்படாதது மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதது தான் என்று தெரியவந்துள்ளது. கவனக்குறைவு ஒருவரின் உயிரையும் பறிக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துது. 

உங்கள் வீட்டு ஏசி உங்களை சிறைக்கு அனுப்புமா?

நமது வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள குளிர்சாதனப்பெட்டி மற்றும் பூச்செடிகளின் பாதுகாப்பில் நாம் போதுமான கவனம் செலுத்துகிறோமா? டெல்லியில் நடைபெற்ற விபத்தில் போலீசார் பதிவு செய்த வழக்கு, இந்த விஷயத்தைத் தெளிவாக்குகிறது. தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால், சட்டப்பிரிவு 125(A)/106 BNS இன் கீழ், ஏசியை சரியாக பொருத்தாவிட்டால், அபராதம் விதிக்கப்படுவதுடன், சிறைவாசமும் விதிக்கப்படலாம்.

பார்க்கப்போனால், விதிமுறைகளை பின்பற்றி ஏசி பொருத்துவது, பூச்செடிகளை வைப்பது என்பது நமது பாதுகாப்பிற்காக மட்டுமல்ல, மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும் என்பதை புரிந்துக் கொள்வது அவசியமானது.

பிரிவு 125(A)/106 BNS

இந்தியச் சட்டத்தின்படி, மரணத்தை விளைவிக்கும் ஒரு செயலுக்கு அலட்சியம் காரணமாக இருந்தால், தண்டனை விதிக்கப்படும். இது கொலை செய்யும் நோக்கத்துடன் செய்யபடாவிட்டாலும், அலட்சியத்தின் காரணமாக என இருந்தாலும் தண்டனை விதிக்கப்படும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 106 (அல்லது 125-A) பிரிவின் கீழ் இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்டப்பிரிவில், மருத்துவ நிபுணர்களின் அலட்சியம், வாகனம் ஓட்டும்போது கவனக்குறைவு போன்றவை வரும் என்று தான் பலரும் நினைத்திருப்பார்கள். அலட்சியத்தினால் ஏற்படும் மரணம் தொடர்பான தண்டனை அல்லது அபராதம் என்பது வழக்கிற்கு வழக்கு மாறுபடும். ஒவ்வொரு வழக்கிலும் குற்றத்தின் தன்மை மற்றும் பிற சூழ்நிலைகளைப் பொறுத்து தண்டனைக்காலம் தீர்மானிக்கப்படும்.

பூச்செடி அல்லது ஏசி போன்ற ஒரு பொருள் உங்கள் வீட்டில் இருந்தோ, அல்லது பால்கனியில் இருந்து விழுந்து ஒருவரை காயப்படுத்தினால், அதற்கு பொறுப்பாவீர்கள். அதேபோல உங்கள் வீட்டின்/கட்டடத்தின் எல்லைக்கு அப்பால் உங்கள் ஏசி நீண்டு கொண்டிருந்தால், அது அத்துமீறலாகக் கருதப்பட்டு, உங்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.

பாதுகாப்பு உதவிக் குறிப்புகள்

வீட்டில் அல்லது கட்டத்தில் ஏசி வைக்கும்போது கவனமாக இருப்பது மிகவும் அவசியம். பால்கனியில் பூச்செடிகள் தண்ணீர் டாங்கிகள் போன்றவற்றை பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.

இரும்பு சட்டத்தை நிறுவவும்

ஏசியை கவனமாகச் பராமரிப்பதுடன், அது நிறுவும்போது சரியாக நிறுவப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். ஏசி வைக்கப்பட்டிருக்கும் இரும்பு சட்டத்தையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். மழை காரணமாக இரும்பு ஸ்டேண்ட் சேதமடைந்து வலுவிழந்திருந்தால், அதன் மூலமும் விபத்து ஏற்படலாம்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.