புதிய வண்டிகளை திரும்பப் பெற்ற BMW! ஒன்றா இரண்டா? 7,20,000 கார்கள்! அதிர்ச்சியூட்டும் பின்னணி!

BMW Vehicles Recall 2024 Latest Update : BMW 720,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது கார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டிருக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம், நீர் பம்ப் மின் இணைப்புகள் சரியாக இல்லை என்றும், கார்களில் தீ விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதால் குறிப்பிட்ட சில வகைக் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

.X1, X3 மற்றும் X5 உள்ளிட்ட பல்வேறு மாடல் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. போதுமான சீல் இல்லாததால் கார்களை திரும்பப் பெற அறிவுறுத்தியதாக தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்தது. ஏனெனில், இது வாகனம் தீப்பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும், அபாயங்களையும் கண்டறிந்துள்ளது.

BMW recalls over 720,000 vehicles over short circuit concern, NHTSA says https://t.co/Ql0vTkXbZZ pic.twitter.com/pnoUIy4ZI7

— Reuters (@Reuters) August 20, 2024

திரும்பப் பெறப்படும் வாகனங்கள்

2012-2015 X1 sDrive28i, X1 xDrive28i, 2012-2016 Z4 sDrive28i, 528i, 528i xDrive, 328i, 328xi, 2016-2018 X40 42,20 x82 xi, 428i, 428i xDrive, 328xi Gran Turismo, 2013-2017 X3 sDrive28i, X3 xDrive28i, 2015-2018 X4 xDrive28i, 2015-2016 428xi என சுமார் 720,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

BMW recall 2012-2015 X1 sDrive28i, X1 xDrive28i, 2012-2016 Z4 sDrive28i, 528i, 528i xDrive, 328i, 328xi, 2016-2018 X5 xdrive 40e, 2014-2016 228i, 228xi, 428i, 428i xDrive, 328xi Gran Turismo, 2013-2017 X3 sDrive28i, X3 xDrive28i, 2015-2018 X4 xDrive28i, 2015-2016 428xi.#bmw pic.twitter.com/Zge5E8do99

— CHW (@cwest0583) August 20, 2024

BMW வாகனங்களை திரும்ப அழைக்கும் பின்னணி
பிஎம்டபிள்யூ 720000 வாகனங்களை திரும்பப்பெறுவதற்கு அடிப்படைக் காரணம்,ம் தண்ணீர் பம்ப் மின் இணைப்பிகள் பிரச்சனை என்றும், இந்த பிரச்சனை தீ விபத்துக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுவது, இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்திருக்கிறது. 

NHTSA அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட வாகனங்களில் போதுமான சீல் இல்லாத நீர் குழாய்கள் உள்ளன, மேலும் காலப்போக்கில் மின்சார பிளக் இணைப்பியில் திரவம் உட்செலுத்தப்படுவதற்கு எளிதில் பாதிக்கப்படலாம். ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், மேலும் அரிதான சந்தர்ப்பங்களில் காரில் தீ ஏற்படும் சாத்தியம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. திரும்பப் பெறப்படும் வாகனங்களில் தண்ணீர் குழாய்கள் மற்றும் பிளக் கனெக்டர்கள் பரிசோதிக்கப்பட்டு தேவைக்கேற்ப மாற்றப்படும்.

பாசிட்டிவ் கிரான்கேஸ் காற்றோட்ட அமைப்பின் இன்டேக் ஏர் ஹவுஸிலிருந்து பம்ப் மீது கீழே விழும் எந்த திரவத்தையும் திசை திருப்ப தேவையான சாதனம் ஒன்றும் நிறுவப்படும் என்றும் தெரியவந்துள்ளது. வாகனங்களை திரும்ப அழைக்கும் அறிவிப்பு, வாகன உரிமையாளர்களுக்கு அக்டோபர் மாதம் அனுப்பப்படும் என்று நம்பப்படுகிறது.

திரும்பப்பெறும் வாகனங்களில் பாகங்கள் இலவசமாக மாற்றித் தரப்படும். இதற்காக வாடிக்கையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட BMW மையத்திற்கு தங்கள் கார்களை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.