மாருதி சுசூகி நிறுவனம் தனது குறைந்த விலை கார்களில் தற்பொழுது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோக்ராம் எனப்படுகின்ற ESP பாதுகாப்பு சார்ந்த அமைப்பினை ஏற்படுத்த துவங்கி உள்ளது. முதற்கட்டமாக ஆல்டோ K10 மற்றும் எஸ்-ப்ரஸ்ஸோ கார்களில் கொண்டு வந்துள்ளது.
சுசூகி Heartect பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு இரண்டு ஏர்பேக்குகளை கொண்டுள்ள இந்த மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் உடன் இபிடி, இன்ஜின் மொபைல்சர் போன்ற வசதிகளுடன் கூடுதலாக தற்பொழுது ESP (Electronic Stability Program) மூலம் வாகனத்தின் ஸ்டெபிளிட்டி தன்மையை அதிகரிப்பதுடன் விபத்தினை தவிர்ப்பதற்காக வாகனத்தினை டிரைவர் சிறப்பாக கையாளுவதற்கும் உதவுகின்றது.
இந்த அமைப்பில் கூடுதலாக ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படுகின்ற ஏபிஎஸ் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் இணைந்து ஒருங்கே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஸ்கிட்டிங் ஆவது சவாலான சாலைகளில் சிறப்பாக பயணிக்கவும் இந்த அமைப்பு கூடுதல் பலனை வழங்குகின்றது.
1.0 லிட்டர் K10C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 49 kW (66.621 PS) @ 5500 rpm மற்றும் 89 Nm @ 3500 rpm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டவை இணைக்கப்பட்டுள்ளது. ESP சேர்க்கப்பட்டிருந்தாலும் விலையில் ஏற்படுத்தவில்லை
குறிப்பாகமாருதி சுசூகி தனது சிறிய கார்களில் பெரிய அளவிலான பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதில்லை என்ற குறைபாடு தொடர்ந்து இருந்து வருகின்றது. ஆனால் தற்பொழுது மாறி வருகின்ற சூழ்நிலை மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்புகின்ற அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டு வருகின்றன எனவே மாருதியும் இப்பொழுது இந்த பட்டியலில் தொடர்ந்து இணைந்து வருகின்றது கூடுதலாக இந்த கார்களிலும் எதிர்காலத்தில் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படுமா என்பது பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.