சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. ஒப்போவின் ‘ஏ’ வரிசை போனாக வெளிவந்துள்ளது.
ஒப்போ ஏ3 – சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- ஏஐ அம்சங்களுடன் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 6ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- 5,100mAh பேட்டரி
- 45 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- யுஎஸ்பி டைப்-சி 2.0
- 5ஜி நெட்வொர்க்
- டூயல் சிம் கார்டு
- இந்த போனின் விலை ரூ.15,999