கண்டி எசல பெரஹெரா நிறைவுற்றதாக அறிவிக்கும் பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தெற்காசியாவின் உயர்வான மத நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹெராவை அடையாளப்படுத்த முழு ஆதரவு.

வரலாற்று சிறப்பு மிக்க கண்டி தலதா மாளியை எசல பெரஹெரா சிறப்பாக நிறைவுள்ளதாக அறிவிக்கும் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தலாதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் இன்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

 

ஊர்வலாமாக ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தலதா மாளிகை மற்றும் அண்மைய விகாரைகளின் தியவடன நிலமேக்களை ஜனாதிபதி வரவேற்றார்.

 

அதனையடுத்து தியவடன நிலமேயினால் பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 

பின்னர் சம்பிரதாய அடிப்படையில் ஜனாதிபதியுடன் தியவடன நிலமேக்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

அதன் பின்னர் பெரஹெராவில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி பரிசுகளை வழங்கி வைத்தார்.

 

அதேநேரம் இதுவரையில் தலதா மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதி நன்கொடையாக மில்லியன் ரூபாய் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

 

அதன் தொடர்ச்சியாக மத்திய மாகாண சபையினால் வௌியிடப்பட்ட சிறப்பு சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 

அதேபோல் எஹெலேபொல வலவு பகுதியை மாளிகைக்கு சாற்றுவதற்கான கொடுப்பனவு பத்திரமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தியவடன நிலமேயிடம் வழங்கி வைக்கப்பட்டது.

 

பின்னர் கண்டி தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹெராவை அடையாளப்படுத்தும் வகையில் மி.மீ நீளத்தில் வெளியிடப்பட்ட முத்திரை சிரேஷ்ட பிரதி தபால்மா அதிபர் கே.ரணசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

அத்தோடு தலாதா மாளிகையின் கலாசாரம் சார்ந்து அச்சிடப்பட்ட முத்திரை, நினைவுச் சின்னம்,தபால் தலை என்பனவற்றையும் மாளிகையின் அருங்காட்சிகத்தில் வைப்புச் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தலதா மாளிகையின் பெரஹெராவை மதம் சார்ந்த ஆசியாவின் உயர் நிகழ்வதக உலகின் முன்பாக அடையாளப்படுத்துவதற்கான அரசாங்க அனுசரணையை வழங்குவதாக உறுதியளித்தார்.

 

பெரஹெராவை ஏற்பாடுச் செய்தமைக்காக சகலருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அதனை தேசிய கலாசார நிகழ்வாக மாத்திரமின்றி, இலங்கையின் தனித்துவமான கலாச்சார அம்சமாக உலகிற்கு கொண்டுச் செல்வதோடு, அதனை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதும் அவசியமாகும்.

 

மேலும் கண்டி நகரத்தை கலாச்சார மத்திய நிலையமாக மாற்றி, பரந்த அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

 

”உலகில் பல நாடுகளில் பெரஹெராக்கல் பல விதமாக நடத்தப்படுகின்றன. அவை ஒவ்வொரு மதங்களினதும் தனித்துவத்தை கொண்டதாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் தலதா மாளிகைக்கு சிறப்பான இடமுண்டு. அதன்படி பெரஹெராவை இந்நாட்டின் உயர்வான கலாச்சார அம்சமாக கருத வேண்டும்.

 

இதற்கான ஏற்பாடுகளை செய்யும் தலதா மாளிகை மற்றும் அதனுடன் தொடர்புடைய விகாரைகளின் தியவடன் நிலமேக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அதனை உயர்வான முறையில் கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கும்.

 

அதன்படி வரலாற்று சிறப்புமிக்க தெற்காசியானின் உயர்வான மத நிகழ்வாக உலகிற்கு கொண்டுச்செல்லப்பட வேண்டும் என்பதோடு, சுற்றுலா வியாபாரத்தின் ஒரு பகுதியாகவும் அதனை இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்களை மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் இணைந்து வழங்கும்.

 

அதேபோல் பயிற்றுவிக்கப்பட்ட கலைஞர்களை கலாச்சார அமைச்சின் ஊடாக பெற்றுக்கொடுக்கவும், 04 தசாப்தங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட பெல்ஹூட் கலாச்சார நிலையத்தை அபிவிருத்தி செய்து பிரதேச இளையோர் யுவதிகளுக்கு கலை அறிவை பெற்றுகொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

இதனால் பெரஹெரா நிகழ்வு கண்டியை கலாச்சார மத்திய நிலையமாக மாற்றியமைக்கும் என்பதோடு, கண்டி நகர அபிவிருத்திக்கான பல திட்டங்களும் செயற்படுத்தப்படும்.

 

போகம்பர கட்டிடத்தின் வரலாற்று பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் ஹில்டன் நிறுவனத்துடன் கைரோத்துக்கொண்டு அதனை ஹோட்டலாக மாற்றியமைக்கவும், கண்டி பழைய தபால் நிலையக் கட்டிடத்தை ஹோட்டலாக மாற்றியமைப்பதற்கும், கண்டி போகம்பரையின் இன்னும் சில பகுதிகளை இந்த ஹோட்டல் வலையமைப்புடன் இணைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

மேலும் கண்டி வடக்கு டிப்போவின் ஒத்துழைப்பையும் இந்த பணிகளுக்காக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் அதேநேரம், தற்போதுள்ள கண்டி நகர சந்தைக் கட்டிடத்தொகுதியை மறுசீரமைப்பதற்கான தீட்டமும் உள்ளது. அத்தோடு திகன மற்றும் குண்டசாலை ஆகிய பகுதிகளை அபிவிருத்தி செய்து சுற்றுலா வியாபாரத்தில் இணைத்துக்கொள்ளவும், ஜப்பானுடன் கலந்துரையாடி மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கட்டுகஸ்தோட்டை வரையில் நீடித்து பாரிய நகர கட்டமைப்பொன்றை உருவாக்க எதிபார்க்கிறோம்.

 

பேராதனை பூங்காவை போன்றே உடவத்தகெலே பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக மதச் செயற்பாடுகளுடன் அந்த பிரதேசத்தை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

 

கொமும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மத்தியஸ்தானங்களாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பதாகவும், அதன்போது கண்டியை கலாச்சார மற்றும் கலைக்கான மத்தியஸ்தானமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பதாகவும், ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

அமைச்சர் பந்துல குணவர்தன, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கண்டி மாவட்டச் செயலாளர் சந்தன தென்னகோன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.