Ben Affleck – Jennifer Lopez: ரூ.500 கோடி அரண்மனை; இரண்டாம் ஆண்டு திருமண நாள்; விவாகரத்து முடிவா?

ஹாலிவுட் நட்சத்திரங்களான பென் அஃப்லெக் – ஜெனிபர் லோபஸ் இருவரும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் பென் அஃப்லெக். ’பியர்ல் ஹார்பர்’, ‘ஆர்கோ’, ‘கான் கேர்ள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், குறிப்பாக 2016ம் ஆண்டு பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் படத்தில் பேட்மேனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

பென் அஃப்லெக் – ஜெனிபர் லோபஸ்

அதேபோல ‘அனகொண்டா’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் ஜெனிஃபர் லோபஸ். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘தி மதர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் AI டெக்னாலஜியை வில்லனாக்கி அட்லஸ் படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பென் அஃப்லெக்கும் ஜெனிஃபர் லோபஸ்ஸும் திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் கூட இருவரும் இஷா அம்பானிக்கு சொந்தமான பிரமாண்ட அரண்மனையை ரூ.500 கோடி கொடுத்து வாங்கி இருந்தனர்.

இந்நிலையில் ஜெனிஃபர் லோபஸும், பென் அஃப்லெக்கும் விவாகரத்து பெறப்போகிறார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜெனிஃபர் லோபஸுக்கும், பென் அஃப்லெக்கிற்கும் திருமணமாகி நேற்றுடன் இரண்டு ஆண்டுகளாகிவிட்டது.

பென் அஃப்லெக் – ஜெனிபர் லோபஸ்

இரண்டாவது திருமணநாளில் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு ஜெனிஃபர் லோபஸ் சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. பென் அஃப்லெக்கிடம் இருந்து எந்த ஒரு ஜீவனாம்சமும் வேண்டாம் என்று நீதிமன்றத்தில் ஜெனிபர் லோபஸ் தெரிவித்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.