570 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விரைவில்! இது எம்ஜி சைபர்ஸ்டர் சூப்பர் கார்!

ஸ்போர்ட்ர்ஸ் கார்களிலேயே எம்ஜியின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் கவர்ச்சிகரமானதாகவும் நவீனமாகவும் உள்ளது. இந்தக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால், அது 570 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும். 
எம்ஜி சைபர்ஸ்டரின் வடிவமைப்பு ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது என்றால் அது நவீன தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல் கார் என்று சொல்லும் அளவுக்கு பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் கார்

எம்ஜி சைபர்ஸ்டர் என்பது எம்ஜி மோட்டார் உருவாக்கிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இது நிறுவனத்தின் எதிர்கால மற்றும் உயர் செயல்திறன் கொண்ட மின்சார வாகனம் (EV) ஆகும். இளம் தலைமுறை மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை மனதில் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கவே அழகாக இருக்கிறது.

இந்தியாவில் அறிமுகமானால், இது பல இளைஞர்களின் கனவுக்காராக மாறும் என்றே சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடில்’ காரின் தயாரிப்பு பதிப்பு காட்டப்பட்டது. இப்போது வரவிருக்கும் எலக்ட்ரிக் ரோட்ஸ்டரின் அம்சங்கள் காரின் அனைத்து விவரங்களையும் கோடிட்டு காட்டுகிறது. இந்த அழகான காரின் விற்பனை அடுத்த ஆண்டு தொடங்கலாம்.

எம்ஜி சைபர்ஸ்டரின் வடிவமைப்பு

மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் நவீனமாகவும் உள்ளது. மேம்பட்ட LED லைட்டிங் அமைப்பு கொண்ட இந்த காரின் ஹெட்லைட்கள் மெலிதாக இருக்கிறது. காரின் பின்புறத்தில் மிதக்கும் லைட்பார் காரின் அழகை அதிகரிக்கிறது. MG Cyberster கார் ஆடம்பர கார் மட்டுமல்ல, ஸ்போர்ட்ஸ் கார் என்றும் சொல்லும் அளவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

சக்தி மற்றும் வேகம்

இரண்டு இருக்கைகள் கொண்ட மின்சார ரோட்ஸ்டர் காரில், இரட்டை மின்சார மோட்டார்கள் இருக்கும். இந்த அமைப்பு அதிகபட்சமாக 528 பிஎச்பி பவரையும், 725 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்கும். இது தவிர, இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும்.

பேட்டரி மற்றும் வரம்பு

MG சைபர்ஸ்டரில் 77 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் இருக்கும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 570 கிமீ தூரம் வரை செல்லும். இந்த ஓபன்-டாப் ஸ்போர்ட்ஸ் காரின் எடை 1,984 கிலோவாக இருக்கும், இது மின்சார காருக்கு மிகவும் அதிகமாக இருக்கும். சைபர்ஸ்டரின் நீளம் 4,533 மிமீ, அகலம் 1,912 மிமீ மற்றும் உயரம் 1,328 மிமீ.

காரின் சிறப்பு அம்சங்கள்

எம்ஜி சைபர்ஸ்டர் 2,689 மிமீ வீல்பேஸுடன் வரும். MG சைபர்ஸ்டரின் இலகுவான பதிப்பும் அறிமுகப்படுத்தப்படும் என்று கார் நிறுவனம் தெரிவிக்கிறது. பின்புற சக்கர இயக்கி உள்ளமைவுடன் வரும் இது 295 BHP க்கும் அதிகமான ஒற்றை மோட்டார் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம் மற்றும் 64kWh பேட்டரி பேக் கொடுக்கப்படலாம். சைபர்ஸ்டரின் RWD மாறுபாடு ஒருமுறை சார்ஜ் செய்தால் 519 கிமீ தூரம் வரை செல்லும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ்காரின் 4-பிஸ்டன் நிலையான காலிப்பர்கள் மற்றும் மிகவும் கடினமான ரோல்பார் கொண்ட பிரேம்போ பிரேக்குகள் நவீனமானவை. இது போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8155 சிப்பில் இயங்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.