பெரும்போகத்திற்கான வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கு உர மானியம்

2024ஃ25 பெரும்போகத்திற்கான வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2024/25 பெரும் போகத்திற்கு அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர்டிலைசர் கம்பனி லிமிட்டட் மற்றும் தனியார் துறையினர் மூலம் உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்குப் போட்டி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளில் பயிரிடப்படும் உயர்ந்தபட்சம் இரண்டு ஹெக்ரெயார்களுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு ரூபா 15,000/- வீதம் நிதியுதவியை கமநல சேவைகள் திணைக்களத்தின் மூலம் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று (21.08.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

01. 2024/25 பெரும்போகத்திற்கான வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கல்

2024/25 பெரும்போகத்திற்கான வயல் காணிகளில் நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்குவதன் மூலம் நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், விளைச்சலை அதிகரிப்பதற்கும் இயலுமை கிடைக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2024/25 பெரும் போகத்திற்கு அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர்டிலைசர் கம்பனி லிமிட்டட் மற்றும் தனியார் துறையினர் மூலம் உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்குப் போட்டி விலையில் விற்பனை செய்வதற்கும், நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளில் பயிரிடப்படும் உயர்ந்தபட்சம் இரண்டு ஹெக்ரெயார்களுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு ரூபா 15,000ஃ- வீதம் நிதியுதவியை கமநல சேவைகள் திணைக்களத்தின் மூலம் வழங்குவதற்கும் விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.