Naani: “தேவையில்லாமல் அதை பெருசுபடுத்த வேண்டாம்"- பிரபாஸ் மீதான விமர்சனம் குறித்து நானி

நாக் அஷ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியான திரைப்படம் `Kalki 2898 AD’. இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபிகா படுகோன், திஷா பதானி கதாநாயகிகளாக நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Kalki 2898 AD

பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படத்தில் பிரபாஸ் ஒரு ஜோக்கர் போல இருக்கிறார் எனப் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்ஸி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இது தெலுங்கு சினிமாவில் பேசுபொருளாகவும் மாறியது.

இந்திய சினிமாவை உலகப் பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்ல எல்லாவற்றையும் கொடுத்தவர் பிரபாஸ் என்றும் கல்கி படத்தின் மீது அர்ஷத் வார்ஸிக்கு பொறாமை என்றும் தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதி பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கு முன்னணி நடிகரான நானி தற்போது இந்த விவகாரம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் நடிப்பில் வருகிற 29ஆம் தேதி ‘Surya’s சாட்டர்டே’ படம் வெளியாக இருக்கிறது. அதன் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

நானி ,சுதீர் பாபு

அதற்கு பதிலளித்த அவர், “நீங்கள் குறிப்பிடும் நபர், அவருடைய வாழ்க்கையில் இதுதான் மிகப் பெரிய விளம்பரமாக அவருக்கு இருக்கப்போகிறது. இது முக்கியமான விஷயம் இல்லை. தேவையில்லாமல் அதைப் பெருசுபடுத்த வேண்டாம்” என்றார். தவிர, தெலுங்கு நடிகர் சுதீர் பாபுவும் பிரபாஸ் மீதான விமர்சனம் குறித்துப் பேசியிருக்கிறார். “விமர்சனம் செய்வது என்பது தவறில்லை. ஆனால் தவறாக விமர்சனம் செய்வது சரி கிடையாது. அதுவும் அர்ஷத் வார்ஸியிடம் இருந்து இதுபோன்ற விமர்சனங்களை எதிர்பார்க்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.