இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் “தேசிய அனர்த்த தயார்நிலை மற்றும் பதிலளிப்பு மூலோபாயத்தில் NDMCC ஒரு மூலக்கல்லாக நிற்கிறது. அதன் கலந்துரையாடல்களும் முடிவுகளும் மனித உயிர்களைக்காக்க, வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க மற்றும் நமது கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன” என குறிப்பிட்டார்.
67வது NDMCC கூட்டம், “புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புகள், மீள்குடியேற்ற சமூகத்தை நோக்கிய கூட்டாண்மையை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்றது. நாட்டில் அனர்த்தங்களை தாங்கும் திறன் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு (DRR) ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான NDMCCயின் கூட்டு அர்ப்பணிப்பைப் இக்கூட்டம் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உலக உணவுத் திட்டத்தின் (WFP) இலங்கை பணிப்பாளர் அப்துர்ரஹிம் சித்திக் அவர்களும் கலந்துக் கொண்டதுடன், WFP சார்பாக இலங்கை பிரதி பணிப்பாளரும் ஜெராட் ரோபெல்லோ கருத்துரைகளை வழங்கினார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், ஆகியவற்றின் பணிப்பாளர்கள் நாயகம், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகழும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.