பூஞ்ச்: இந்திய ராணுவத்தின் மினி ட்ரோன் (யூஏவி) வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் விழுந்தது. அதனை இந்தியா வசம் திரும்ப தருமாறு பாகிஸ்தானுக்கு ஹாட்லைன் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று காலை 9.25 மணி அளவில் அந்த ட்ரோன் இந்திய எல்லையில் வழக்கமான பயிற்சி மிஷனில் இருந்துள்ளது. இந்திய எல்லைக்குள் இயக்கப்பட்ட அந்த ட்ரோன், தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது.
அதன் காரணமாக இந்தியாவின் பிம்பர் காலி செக்டாரில் இருந்து அதற்கு எதிரே உள்ள பாகிஸ்தான் நாட்டின் நிகியல் செக்டரில் விழுந்தது. பாகிஸ்தான் படைகள் அதனை கண்டெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிருந்து வரும் பத்திரிகை செய்தி இதனை உறுதி செய்துள்ளது.
ட்ரோனை இந்தியா வசம் திரும்ப தருமாறு பாகிஸ்தானுக்கு ஹாட்லைன் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அந்த ட்ரோன் உள்நாட்டில் இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.