"`பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பிறகு `வாழை' என்னுடைய ஃபேவரைட்!" – வாழ்த்திய சிவகார்த்திகேயன்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான `வாழை’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள், நடிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் மாரி செல்வராஜையும், படக்குழுவினரையும் பாராட்டி தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

வாழை

“மாரி செல்வராஜை ரொம்ப வருடங்களுக்கு முன்பே தெரியும். அப்போதே அவருக்கு நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்! அவரின் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்தபோதே என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்கள் எல்லாம் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தன. தற்போது ‘வாழை’ படத்தில் அவருடைய வாழ்வில் நடந்த விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். மிக நெருக்கமான ஒருவரின் கதையைக் கேட்பது போன்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது.

படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் தான் ஒரு வலிமையான இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். தொடர்ந்து வாழ்வியல் சார்ந்த படங்களை அவர் பண்ண வேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன். ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு ‘வாழை’ என்னுடைய ஃபேவரைட் படமாக மாறியுள்ளது. பல விருதுகள் பெறத் தகுதியுள்ள படம் இந்த ‘வாழை’!” என்று தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.

அவருக்கு நன்றி தெரிவித்து மாரி செல்வராஜும் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். “‘பரியேறும் பெருமாள்’ வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள்… ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்துக் கொண்டாடித் தீர்த்த வார்த்தைகளைப் பத்திரப்படுத்தியதைப் போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு பிரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாகப் பத்திரப்படுத்திக்கொள்கிறேன். நன்றி சிவகார்த்திகேயன் சகோ!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.