உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் எண் அல்லது பதிவு செய்துள்ள பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை விற்பனை செய்யும் உணவு நிறுவனங்கள், ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தி அவற்றை விற்பனை செய்வது தெரியவந்தது.
இது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்புச் சட்டம் 2006-ன் விதிகளுக்கு முரணாக இருப்பதாக கருதி, ஆய்வு மேற்கொண்டது.
இதில், ஏ1 மற்றும் ஏ2 என்ற வகைப்பாடு, பாலில் உள்ள பீட்டா- கேசின் என்ற புரதக் கட்டமைப்புடன் தொடர்புள்ளது தெரிய வந்தது.
அதே நேரம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின்படி, இதுபோன்று ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தவில்லை என்பதால், இது விதிமீறலாக கருதப்பட்டது. இது அங்கீகரிக்கப்படாத செயலாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், பால் உற்பத்திப் பொருள்களில் இத்தகைய வகைப்பாடு லேபிள்களை அந்தந்த உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உடனடியாக நீக்க வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, ஆன்லைன் விற்பனை தளங்களில் இருந்து பால் பொருள்களின் இத்தகைய வகைப்படுத்தலை காலதாமதமின்றி அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உணவு தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தக வியாபாரங்களில் இத்தகைய வேறுபாடுகளை விளம்பரப்படுத்தி காட்டக்கூடாது.
இந்த உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக எந்த ஒரு உணவு நிறுவனங்களுக்கும் கால அவகாசம் வழங்கப்படாது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.