நாம் கிட்டத்தட்ட அனைத்து வகையான பணிகளுக்கு மின்சாரத்தை நம்பியிருக்கிறோம். இந்நிலையில், சில நேரங்களில் நாம் செய்யும் சில தவறுகள் காரணமாக பெரும் இழப்பு ஏற்படலாம். வீட்டிற்கான மின்னோட்டம் (240 வோல்ட்) கூட உங்கள் இதயத்தை நிறுத்தும் ஆற்றல் கொண்டது. மின் அதிர்ச்சி, தீ மற்றும் வெடிப்பு போன்ற மின்சாரத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாம் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் அந்த அபாயங்களை அறிந்து கொண்டு முன் யோசனையுடன் செயல்பட வேண்டும்.அந்த வகையில், எக்ஸ்டென்ஷன் கார்டுகளை பயன்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
ஸ்விட்ச் போர்டு வசதி இல்லாத இடங்களில் மின் இணைப்பை பெற, நம்மில் பலர் எக்ஸ்டென்ஷன் கார்டுகளை பயன்படுத்துவோம். பல நீளங்களில் பல மாடல்களில் கிடைக்கும் எக்ஸ்டென்ஷன் கார்டுகள் பல வகைகளில் நமக்கு பயன்படுகின்றன. ஆனால், இதனை உபயோகிக்கும் போது செய்யும் சில தவறுகள் காரணமாக பெரும் இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம். எனவே எச்சரிக்கை (Safety Tips) தேவை.
எக்ஸ்டென்ஷன் கார்டு தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் (Mistakes While Using Extension Cord)
1. முதலில் நாம் வாங்கும் எக்ஸ்டென்ஷன் கார்டு நல்ல தரமான பிராண்டை சேர்ந்ததாக இருக்க வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் கூடாது. பணத்தை சேமிக்க நினைத்து, மலிவான விலையில் கிடைக்கும் எக்ஸ்டென்ஷன் கார்டுகளை வாங்குவதால், பெரும் ஆபத்து ஏற்படலாம். மின்சார ஷாக், தீ விபத்து போன்ற அபாயங்கள் இருப்பதால், இந்த விஷயத்தில் கவனம் தேவை. சில நூறுகளை சேமிக்க, பல ஆயிரங்களை இழப்பது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் புத்திசாலித்தனமான செயல் அல்ல.
2. எலக்டெஷன் கார்டு தரமனதாக இல்லை என்றால், அதிக மின்சுமை மற்றும் அழுத்தம் காரணமாக, வயரில் உள்ள கம்பிகள் வெப்பமடைந்து உருகி, தீ பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஷார்ட் சர்க்யூட் எதுவும் ஏற்படாத வண்ணம், எக்ஸ்டென்ஷன் கார்டுகளை, எலக்ட்ரீஷனைக் கொண்டு பரிசோதித்து நிறுவ வேண்டும்.
3. எலக்டெஷன் கார்டு தரமனதாக இல்லை என்றால், , எக்ஸ்டென்ஷன் கார்டு மூலம் மின்சார இணைப்பை பெற்றுள்ள சாதனங்கள் பழுதடைலாம். சில சமயங்களில் நாம் ஏசி பிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களுக்கு கூட எக்ஸ்டென்ஷன் கார்டை பயன்படுத்துகிறோம். ஆனால் இது மிகவும் தவறு. அப்படியே பயன்படுத்தினாலும், எலக்ட்ரீசியன் உதவியோடு தான் அதனை நிறுவ வேண்டும்.
4. எக்ஸ்டென்ஷன் கார்டில் எர்திங் வயருக்கு சரியான கனெக்ஷன் இல்லை என்றால், ஷாக் அடிக்கும் அபாயமும் உண்டு. எனவே, ஏசி பிரிட்ஜ் போன்ற எர்த்திக் அவசியம் தேவைப்படும் சாதனங்களுக்கு, எக்ஸ்டென்ஷன் கார்டு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
5. அதோடு எக்ஸ்டென்ஷன் கார்டுகளை குழந்தைகள் கைக்கு எட்டும் வண்ணம் இருப்பதால், குழந்தைகளுக்கு ஷாக் அடிக்கும் அபாயம் உள்ளது. எனவே மிகுந்த எச்சரிக்கை தேவை. அதனை உயரமான இடத்தில் அவர் கைக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும்.