இந்த தொழில்நுட்ப யுகத்தில், இன்டர்நெட் என்பது நமக்கு தேவையான அனைத்தையும் நமது கைகளுக்குள் கொண்டு வந்து கொடுக்கும் அற்புதமான புதையல் ஆகும். எந்தவொரு தகவல் தேவை என்றாலும், யாரை கேட்பது என்றால், முதலில் நினைவுக்கு வருவது ‘கூகுளாண்டவர்’ தான்…
தகவல்களைத் தேடி நேரடியாக Google செய்கிறோம். ஆனால், சந்தேகம் இருந்தாலும் தவறுதலாக கூட கூகுளில் தேடக்கூடாத சில கேள்விகளும் விஷயங்களும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதேபோல, கவனக்குறைவாக தேடினாலும், இந்தக் கேள்விகள் உங்களை சிறைக்கு அனுப்ப காரணமாகலாம்.
குழந்தை ஆபாசம்
கூகுளில் தவறுதலாக கூட குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களையோ (Child Porn) ஆபாச வீடியோக்களையோ தேட வேண்டாம். இந்தியாவில், குழந்தைகளின் ஆபாசத்தைப் பார்ப்பது, தயாரிப்பது மற்றும் வைத்திருப்பது POCSO சட்டம் 2012 இன் பிரிவு 14 இன் கீழ் கடுமையான குற்றமாகும். இந்த தவறு செய்து பிடிபட்டால் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே விளையாட்டாகக்கூட இந்த கேள்வியை கூகுளிடம் கேட்டுவிட வேண்டாம்.
வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பம்
வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பம் (Bomb making technique) பற்றி தற்செயலாக கூகுளில் தேடியிருந்தால், பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரில் வந்துவிடுவீர்கள். தேவையே இல்லாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். வேடிக்கையாகக் கூட, வெடிகுண்டு தயாரிக்கும் நுட்பத்தை கூகுளில் தேடாதீர்கள்.
திருட்டு திரைப்படம்
ஒரு திரைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றுவது அல்லது ஒரு படத்தின் திருட்டு பதிப்பை (Pirated film) ஆன்லைனில் கசியவிடுவது சட்டவிரோதமானது. இது தவிர, திருட்டு திரைப்படங்களை ஆன்லைனில் பதிவிறக்குவதும் சட்டவிரோதமானது, படம் பார்க்க ஆசைப்பட்டு, ஜெயிலுக்கு போகவேண்டாம்.
கருக்கலைப்பு செய்வது எப்படி?
இந்தியாவில், முறையான மருத்துவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வதும் சட்டவிரோதமானது. அத்தகைய சூழ்நிலையில், கருக்கலைப்பு செய்வது எப்படி (How to do abortion) என்று கூகுளில் தேடினால், உங்கள் பிடி, சட்டத்தின் கைக்குள் சிக்கிவிடும்.
பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் புகைப்படம்
உச்ச நீதிமன்றத்தின் விதிகளின்படி, துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்தவொரு நபரின் உண்மையான பெயர், முகவரி மற்றும் புகைப்படத்தை வெளியிடக்கூடாது. எந்தவொரு நபரும், அச்சு அல்லது மின்னணு ஊடகங்களிலும் பாதிக்கப்பட்டவரின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துவது (Name and photo of the victim) சட்டவிரோதமானது.
கூகுளாண்டவரிடம் கேட்கக்கூடாத கேள்விகள்
இது தவிர, நீங்கள் எந்த பிரச்சனையிலும் சிக்க விரும்பவில்லை என்றால், வேறு சில விஷயங்களை கூகுளில் தேடவே கூடாது. எடுத்துக்காட்டாக, உங்கள் மின்னஞ்சல் ஐடி, மருந்துகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை எண்களை Google இல் தேடவே கூடாது. கூகுளில் இவற்றைத் தேடினால், நீங்கள் மோசடிக்கு ஆளாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதால் இவற்றை நேரடியாக கூகுளில் தேடவேண்டாம்.