Amy Jackson: “வாழ்வின் பயணம் இப்போது தொடங்கிவிட்டது!"- காதலரைக் கரம்பிடித்த எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சனுக்குத் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

`மதராசப்பட்டினம்’ படத்தில் துரையம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். அதன்பிறகு `ஐ’, `2.0′, `தெறி’, `கெத்து’, `தங்க மகன்’ எனப் பல படங்களில் நடித்தார்.

எமி ஜாக்சன், ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்

தற்போது ஹாலிவுட்டில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவைக் காதலித்து பின்னர், அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. இவர்களுக்கு 2019யில் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அனைவரும் எமி மற்றும் ஜார்ஜ் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் இருவரும் மனஸ்தாபத்தால் பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு எமி ஜாக்சன் , பிரபல ஹாலிவுட் நடிகர் ஆன எட் வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து வந்தார். இதுதொடர்பான செய்திகளும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலானது. சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் எமி ஜாக்சன்- எட் வெஸ்ட்விக் இருவருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

திருமணத்தின் புகைப்படங்களை ‘வாழ்வின் பயணம் இப்போது தொடங்கிவிட்டது’ என்ற கேப்சனுடன் இருவரும் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் எமி ஜாக்சன்- எட் வெஸ்ட்விக் ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.