சென்னை தேனாம்பேட்டையில் தி.மு.க-வின் தலைமை அலுவலகம், கலைஞர் டி.வி அலுவலகம் ஆகியவை அண்ணா அறிவாலயத்தில் செயல்பட்டுவருகிறது. இங்குள்ள நுழைவு வாயல் பகுதிக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்தார். அந்தப் பைக்கில் அ.தி.மு.க, ஊடகம் என ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்தது. அந்த நபர் அத்துமீறி அண்ணா அறிவாலயத்துக்குள் நுழைவதைப் பார்த்த பாதுகாப்பு பணியிலிருந்தவர்கள், உடனடியாக அவரை மடக்கினர். அதனால் பாதுகாப்பு பணியிலிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மர்ம நபர், திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை அண்ணா அறிவாலயத்துக்குள் விசினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு பணியிலிருந்தவர்கள் பைக்கில் வந்தவரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர் வீசியது என்னவென்று பார்த்தபோது அது பீர் பாட்டில் எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்தவர்கள் ஒப்படைத்தனர்.
தேனாம்பேட்டை போலீஸார் நடத்திய விசாரணையில், பீர்பாட்டிலை வீசியவர் கண்ணகி நகரை சேர்ந்த கோவர்தன் என்பதும் முன்னாள் அதிமுக நிர்வாகி எனத் தெரியவந்தது. இவர் மதுபோதையிலிருந்ததால் அவரிடம் போலீஸாரால் விசாரணை நடத்த முடியவில்லை.போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரித்தபோது அரசு விற்கும் மதுவினால் தனது வீட்டில் தினமும் மனைவியுடன் பிரச்சனை ஏற்படுவதாகவும், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடான இந்த மதுவை திமுக ஒழிக்க தவறிவிட்டதாக கூறினார். அதனால்தான் அண்ணா அறிவாலயத்தில் பீர் பாட்டிலை வீசியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து கோவர்தனிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பிறகு கோவர்தனை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88