வரும் செப்டம்பர் 9ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய அல்கசார் எஸ்யூவி காரின் இன்டீரியர் தொடர்பான படங்களில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய விபரங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் முந்தைய மாடலில் இருந்து மேம்பட்டதாகவும் கிரெட்டா மாடலில் இருந்து மாறுபட்ட நிறத்துடன் வரவுள்ளது.
அடிப்படையில் டேஷ்போர்டு அம்சமானது கிரெட்டா மாடலில் இருந்து பெற்றிருந்தாலும் கூட அதில் கொடுக்கப்பட்டுள்ள டேன் நிறம் மற்றும் நீல நிறத்தின் கலவையாக அமைந்திருக்கின்றது.
மற்றபடி 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டிருக்கின்றது. மிகவும் தாராளமான வகையில் இட வசதியை வழங்கும் வகையில் தற்பொழுது மேம்பட்ட சில அம்சங்களை கொண்டிருக்கின்றது கூடுதலாக இருக்கையில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு சொகுசான தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.
மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் இருந்து மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என இரண்டு விதமான இன்ஜின் ஆப்சனை பெற உள்ளது. ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக DCT அல்லது ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் ஆனது பெற்று இருக்கும்.
கடந்த சில நாட்களாக இந்த ஹூண்டாய் அல்கசார் மாடலுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதனால் செப்டம்பர் 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட உடன் உடனடியாக டெலிவரி தொடங்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.