மலையாள திரையுலகை நாளும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் `ஹேமா' கமிட்டி அறிக்கை… 17 பாலியல் வழக்குகள் பதிவு

மலையாள திரைத்துறையில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் மீது நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி நான்காண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியாகியிருந்தது. அது வெளியான நாள்முதல் மலையாள ஆண் இயக்குநர்கள், நடிகர்கள், பிரபலங்கள் குறித்து நாளும் வெளிவரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

பிரபல மலையாள நடிகர் சித்திக் – Siddique

இதில், நடிகை ரேவதி சம்பத் பிரபல இயக்குநரும் நடிகருமான சித்திக் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பாலியல் புகார் அளித்ததைத்தொடர்ந்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் நடிகை மினு முனீர் நடிகரும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வுமான முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு ஆகியோர் மீது பாலியல் புகார் அளித்திருக்கிறார். இவர்கள் மட்டுமல்லாது, மலையாள திரைப் பிரபலங்கள் துளசிதாஸ், வி.ஏ.ஸ்ரீகுமார், பாபுராஜ் மற்றும் இயக்குநர் ரஞ்சித் உட்பட பலர்மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றின் எதிரொலியாக, மலையாள திரைப்பட சங்கமான அம்மா-வில் (Association of Malayalam Movie Artistes) தனது பொதுச் செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்திருக்கிறார். அதேபோல், மலையாள சினிமா அகாடமி தலைவர் பதவியிலிருந்து ரஞ்சித்தும் விலகியிருக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, மோகன்லால் உட்பட அம்மா-வில் பதவியிலிருக்கும் இருக்கும் அனைவரும் கூட்டாகப் பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நடிகர்கள்

இந்த நிலையில், மலையாள நடிகர்கள் உட்பட பலர் மீது இதுவரை 17 பாலியல் வழக்குகளை போலீஸார் பதிவுசெய்திருக்கின்றனர். மேலும், இந்தப் புகார்தாரர்களில் சில பெண்கள், இதற்கு முன்பு ஊடகங்கள் மற்றும் ஹேமா கமிட்டியில் இவற்றைத் தெரிவிக்காதவர்கள் என்பதால் மேலும் பல பாலியல் புகார்கள் வெளிவரக்கூடும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், இதில் ஒவ்வொரு புகாரையும் விசாரிக்கத் தனிக் குழு நியமிக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் ஐஜி ஜி.ஸ்பர்ஜன் குமார் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.