Jio Prepaid Plans: அசத்தும் ஜியோ… தினம் 3 ஜிபி டேட்டா உடன் இலவச நெட்பிளிக்ஸ்

Best Reliance Jio Prepaid plans: தொலைத் தொடர்பு துறையின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மலிவான கட்டணம் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. இருப்பினும், கடந்த மாதம் ஜூலை தொடக்கத்தில், அதன் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்தியதால் பயனர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பலர், மலிவான திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி தனது பார்வையை திருப்பி வந்தனர். இந்நிலையில்,  இப்போது நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நன்மைகளை அள்ளி வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு தற்போது 48 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டியுடன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான பலன்களை வழங்குவதோடு, OTT இலவச சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது. ரூ.1,299 மற்றும் ரூ.1,799 என்ற கட்டணத்தில் கிடைக்கும் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ நிறுவனம் . இந்த திட்டங்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி/3ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை 84 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதோடு ஓடிடி இலவச சந்தாவும் நன்மைகளும் கிடைக்கும். ஒன்றில் மொபைல் சந்தாவும், ஒன்றில் அடிப்படை திட்டத்திற்கான சந்தாவும் இலவசம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1299 பிரீபெய்ட் திட்டம் (Reliance Jio Prepaid plan for Rs.1,299)

ஜியோவின் ரூ.1299 பிரீபெய்ட்  திட்டம் 84 நாட்கள்வேலிடிட்டி கொண்டது. எந்த நெட்வொர்க்கிலும் 84 நாட்களுக்கு இலவச வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், நிறுவனம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் தினமும் 2ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். மேலும், இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற 5G இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில், மொபைலில் கண்டு களிக்க நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்திற்கான இலவச சந்தாவும் அடங்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1799 பிரீபெய்ட் திட்டம் (Reliance Jio Prepaid plan for Rs.1,799)

ஜியோவின் ரூ.1799 பிரீபெய்ட்  திட்டம் 84 நாட்கள்வேலிடிட்டி கொண்டது. . இதில் 84 நாட்கள் நீண்ட வேலிடிட்டி கிடைக்கும். இதில் 84 நாட்களுக்கு  இலவச வரம்பற்ற அழைப்புடன், தினமும் 100 இலவச SMSகளைப் பெறுவீர்கள்.  இந்த திட்டத்தில், நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்திற்கான இலவச சந்தாவும் அடங்கும்
நீங்கள் அதிக இணையம் தேவைப்படும் மொபைல் பயனராக இருந்தால், இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கு 252 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. தினமும் 3ஜிபி வரை இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் வரம்பற்ற உண்மையான 5G டேட்டாவுடன் வருகிறது. உங்கள் பகுதியில் 5ஜி இணைப்பு இருந்தால், வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இது தவிர, இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் (Jio TV, Jio Cinema & Jio Cloud)ஆகியவற்றின் இலவச சந்தாவும் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.