இந்தியாவில் மாருதி சுசூகி மூலம் தயாரிக்கப்பட்டு ஜப்பான் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பிரான்க்ஸ் மாடலில் ADAS பாதுகாப்பு தொகுப்பு பெற்றுள்ள நிலையில் இதே மாடல் இந்திய சந்தைக்கும் விற்பனை செய்யப்படுமா என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ள நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக இருந்தாலும் பெரும்பாலான கார்களின் அடிப்படையான பாதுகாப்ப அம்சங்களை தற்பொழுது மேம்படுத்தி வருகின்றது என் நிலையில் இந்நிறுவனத்தின் Fronx காரிலும் அதிநவீன ஓட்டுநருக்கு உதவுகின்ற சார்ந்த பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகின்றது.
1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறுகின்றது.
பவர்ஃபுல்லான 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
எந்தமாதிரியான ADAS சார்ந்த அம்சங்களை பெறும் என்பது ஜப்பானிலிருந்தும் செய்யப்படுகின்ற மாடலில் இருந்து பெறப்படும் எனது பார்க்கப்படுகின்றது இதன் முழுமையான விபரங்கள் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் அதன் பிறகு இந்திய சந்தைக்கு அறிமுகம் எப்பொழுது என்ற விபரங்கள் வெளியாகும்.